ஆர்எஸ்எஸ்சைப் போலவே பிஎஃப்ஐ அமைப்பையும் எதிர்க்கிறோம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவிப்பு

ஆர்எஸ்எஸ்சைப் போலவே  பிஎஃப்ஐ அமைப்பையும் எதிர்க்கிறோம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவிப்பு

மத்திய உள்துறை அமைச்சகம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு ஐந்து ஆண்டுகளுக்குத் தடைவிதித்தது. இதை இஸ்லாமியர்களின் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரவேற்றுள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகம், நிர்வாகிகள் இல்லங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இவ்விவகாரத்தில் பாஜக நிர்வாகிகள், இந்து இயக்கங்களின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எஸ்டிபிஐ கட்சியினர் உள்பட பலரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்குத் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இந்திய யூனிய்ன் முஸ்லிம் லீக் கட்சி வரவேற்றுள்ளது.

கேரளத்தில் மிக வலுவாக இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. அக்கட்சிக்கு கேரளத்தில் 15-க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் தடை குறித்துப் பேசியிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கேரள எம்எல்ஏவுமான எம்.கே.முனீர், “திருக்குரானை தவறான புரிந்துகொண்டு அந்த அமைப்பினர் சமூகமக்களை தவறாக வழிநடத்தியுள்ளனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா இளம் தலைமுறையினரை தவறாக வழிநடத்தியதுடன், சமூகத்தில் பிளவையும், வெறுப்பையும் ஏற்படுத்த முயற்சித்தது. சிறுகுழந்தைகளைக் கூட பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அவமதிப்பு முழக்கத்தை எழுப்பச் செய்தனர். இஸ்லாம் அப்படிச் செய்ய வலியுறுத்தவே இல்லை. ஆர்எஸ்எஸ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, எஸ்டிபிஐ ஆகியவற்றை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எதிர்க்கிறது. அதன் சிந்தாந்தங்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்.”என கோழிக்கோட்டில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in