பொருளாதார வல்லரசாக இந்தியா உருவெடுக்கும்: பிரதமர் மோடி உறுதி

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பொருளாதார வல்லரசாக இந்தியா உருவாகும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைக்கு வரும் 17-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, தாமோ மாவட்டத்தில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ஆதரவு திரட்டினார்.

பாஜக
பாஜக

அப்போது அவர் பேசியதாவது: பாஜக ஆட்சி அமைத்த 2014-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் பொருளாதாரம் 10-வது இடத்திலிருந்து இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து நாட்டினர் 200 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டனர். தற்போது அவர்களே இந்தியாவைக் கண்டு வியப்படைகின்றனர். உலகத்தின் பார்வையும் இந்தியாவின் மீது திரும்பியுள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அடுத்த ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலில் மக்களின் ஆதரவோடு பாஜக மீண்டும் வெற்றிபெறும். பாஜக 3-வது முறையாக ஆட்சி அமைத்தால், உலகில் மிக உயர்ந்த பொருளாதாரம் கொண்ட 3 நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும். பொருளாதார வல்லரசாக இந்தியா உருவாகும்" இவ்வாறு மோடி பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in