ஊடகம், பொழுதுபோக்குத் துறையில் 3-வது இடத்துக்கு முன்னேறும் இந்தியா!

பனாஜியில் இந்தியாவின் உலக சினிமா திருவிழா (ஐஎஃப்எஃப்ஐ) 54-வது தொகுப்பை தொடங்கி வைத்துப் பேசும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர்...
பனாஜியில் இந்தியாவின் உலக சினிமா திருவிழா (ஐஎஃப்எஃப்ஐ) 54-வது தொகுப்பை தொடங்கி வைத்துப் பேசும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர்...

ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா உலக அளவில் 3வது இடத்துக்கு முன்னேறும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

உலக சினிமா திருவிழா (ஐஎஃப்எஃப்ஐ) 54வது தொகுப்பு நிகழ்ச்சியில்...
உலக சினிமா திருவிழா (ஐஎஃப்எஃப்ஐ) 54வது தொகுப்பு நிகழ்ச்சியில்...

கோவாவின், பனாஜியில் இந்தியாவின் உலக சினிமா திருவிழா (ஐஎஃப்எஃப்ஐ) 54-வது தொகுப்பை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:

”நாட்டில் உள்ள கண்டன்ட் கிரியேட்டர்ஸ்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் சிறந்த குறும்படங்களுக்கு ஓடிடி விருது வழங்க ஐஎஃப்எஃப்ஐ முடிவு செய்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று காலகட்டத்தில் உலகமே முடங்கிக் கிடந்த வேளையில் மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக திகழ்ந்தது ஓடிடி தளங்கள் தான். ஆகவேதான் இதற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. ஓடிடி துறையானது 28 சதவீத வளர்ச்சி வேகத்தில் வளர்ந்து வருகிறது.

சிறந்த திரை கலைஞர்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் விருது வழங்கினார்.
சிறந்த திரை கலைஞர்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் விருது வழங்கினார்.

ஆகவே தான் இந்த துறையில் விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒருபுறம் இந்தியா உலக அளவில் பொருளாதாரத்தில் 5-வது மிகப்பெரிய நாடாக உருவெடுத்துள்ளது. அதேபோல், ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் தொழில் துறை சந்தையிலும் இந்தியா உலக அளவில் 5-வது இடத்தை வகிக்கிறது. தேசிய பாரம்பரிய திரைப்பட திட்டத்தின் கீழ், இந்திய தேசிய திரைப்பட காப்பகம் (என்எஃப்ஏஐ), தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் (என்எஃப்டிசி) ஆகியவற்றின் சிறந்த படைப்புகளை மீட்டுருவாக்கம் செய்து ஏழு பொதுகாட்சிகளாக வெளியிட உள்ளோம்”

இவ்வாறு அனுராக் தாகூர் தெரிவித்தார்.

தேசிய பாரம்பரிய திரைப்பட திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் மீட்டுருவாக்கம் செய்து புதுப்பிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது... 4 மணி நேரம் அவகாசம் தர்றேன்... நடிகர் சங்கத்தை எச்சரித்த மன்சூர் அலிகான்!

உத்தராகண்ட் சுரங்க விபத்து; 41 தொழிலாளர்களின் நிலை என்ன? வெளியானது வீடியோ

பரபரப்பு.. வைரமுத்துவை மகளிர் ஆணையம் விசாரிக்க வேண்டும்... ஹெச்.ராஜா வலியுறுத்தல்!

இறப்புக்கு முன் நடிகர் மாரிமுத்து வெளியிட்ட வீடியோ... ரசிகர்கள் உருக்கம்!

ரூ.1,760 கோடி பணம், மதுபானம் பறிமுதல்! தேர்தல் ஆணையம் அதிரடி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in