
இஸ்ரேல் ஹமாஸ் போரால் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு மருந்து மற்றும் நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் மாஸ் இடையேயான போர் வலுத்து வருவதால் அங்கு ஏராளமான பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஆயிரக்கணக்கானோர் இரு நாடுகளிலும் உயிரிழந்து உள்ள நிலையில், ஏராளமானோர் மருத்துவம், உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இன்றி காசா பகுதியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இவர்களுக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் உதவி வழங்குவதாக உறுதியளித்திருந்த நிலையில் இந்திய அரசு சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. 32 டன் பேரிடர் நிவாரண பொருட்களையும், 6.5 டன் மருந்து பொருட்களையும் விமான மூலம் இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இந்த நிவாரண பொருட்கள் எகிப்து சென்றடைந்து, பின்னர் அங்கிருந்து சாலை வழியாக காசாவிற்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
உஷார்... தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
பிரபல கால்பந்து ஜாம்பவான் ராபர்ட் சார்ல்டன் காலமானார்! ரசிகர்கள் இரங்கல்!
பரபரப்பு… அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!
அதிர்ச்சி... புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை!
அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி... வாக்குவாதத்தால் பரபரப்பு!