சிஏஏ குறித்து ஐ.நா பொதுச்சபையில் பாகிஸ்தான் கேள்வி... இந்தியா கண்டனம்!

இந்தியாவின் நிரந்தரத் தூதர் ருசித்ரா கம்போஜ்
இந்தியாவின் நிரந்தரத் தூதர் ருசித்ரா கம்போஜ்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் சிஏஏ சட்டம் மற்றும் அயோத்தி ராமர் கோயில் குறித்து கேள்வி எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

சிஏஏ சட்டம்
சிஏஏ சட்டம்

கடந்த 2019-ம் ஆண்டில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மார்ச் 11 ஆம் தேதி அமலுக்கு வந்தது. அதன்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு கடந்த 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவில் தஞ்சமடைந்த இந்து, சீக்கிய, சமண, புத்த, பார்சி, கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது. ஆனால் சிஏஏ சட்டத்தில் ஏன் முஸ்லிம்களுக்கு இடமில்லை என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம்
பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம்

இந்நிலையில், நியூயார்க்கில் இன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தில் சிஏஏ சட்டம் மற்றும் அயோத்தி ராமர் கோயில் குறித்து கேள்வி எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் தூதர் முனிர் அக்ரம், அயோத்தி ராமர் கோயில் மற்றும் குடியுரிமைச் சட்டம் ஆகியவை குறித்து பேசினார்.

அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்

இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஐ.நாவிற்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் ருசித்ரா கம்போஜ், ”இந்த அவையில் பாகிஸ்தான் ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லி வருகிறது. உலகம் வளர்ந்து வருகிறது. ஆனால், இந்தியாவின் அண்டை நாடானது, ஒரே இடத்தில் தேங்கி நிற்பதுடன், ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லி வருகிறது.

எனது நாட்டுடன் தொடர்புடைய விஷயங்களில், அந்நாட்டு குழுவினர் தவறான கண்ணோட்டத்தை காண்பது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது. இந்தச் சபையானது, ஞானம், ஆழம் மற்றும் உலகளாவிய கண்ணோட்டத்தைக் கோரும் ஒரு விஷயத்தை உறுப்பினர்களிடம் இருந்து கோருகிறது. ஒரு வேளை அதற்கான பலம் அந்நாட்டிடம் இல்லாமல் இருக்கலாம்” எனக் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

அமலுக்கு வந்தது தேர்தல் விதிமுறைகள்.. இனி இதையெல்லாம் செய்யக்கூடாது!

செல்லூர் ராஜூ செம தாக்கு... தமிழ்நாட்டுல இருக்கிற ஒரே அரைவேக்காடு அண்ணாமலை தான்!

குட் நியூஸ்... அரசு உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000!

இரட்டை இலை சின்னம் எங்களுக்கு வேண்டும்... தலைமை தேர்தல் ஆணையருக்கு ஓபிஎஸ் கடிதம்!

பெண்ணைக் கேலி செய்த வாலிபர் கோடாரியால் வெட்டிக் கொலை.. தாபாவில் பயங்கரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in