இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம்: ராகுல் காந்தி சீற்றம்

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக பிரதமர் கூறினார். அந்த வேலைகள் எங்கே போனது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்

‘பாரத் ஜோடோ யாத்ரா’ 1,000 கி.மீ தூரத்தை எட்டிய நிலையில் கர்நாடக மாநிலம் பல்லாரியில் நேற்று நடைபெற்ற மெகா பேரணியில் பேசிய ராகுல் காந்தி, “45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவேன் என்று பிரதமர் கூறினார். அந்த வேலைகள் எங்கே போனது?. அதற்கு பதிலாக கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையிழந்துள்ளனர்” என்று கூறினார்.

கர்நாடகாவில் அரசு ஒப்பந்தங்களுக்கு 40% கமிஷன் என்று கூறப்படுவது பற்றி பேசிய ராகுல் காந்தி, “பணக்காரர்களுக்கு மட்டுமே அரசு வேலை கிடைக்கும் என்ற நிலை கர்நாடகாவில் உள்ளது. கர்நாடகாவில் 2.5 லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாக இருப்பது ஏன். நீங்கள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக விரும்பினால், ரூ.80 லட்சம் செலுத்தினால் ஆகலாம். காசு இருந்தால் கர்நாடகாவில் அரசு வேலை வாங்கலாம். உங்களிடம் பணம் இல்லையென்றால், நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் வேலையில்லாமல் இருக்கலாம்”என்று கூறினார்.

மேலும், “இந்த அரசு எஸ்சி/எஸ்டிக்கு எதிரானது. இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, எஸ்சி/எஸ்டியினருக்கு எதிரான வன்கொடுமைகள் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. எஸ்சி/எஸ்டிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.8,000 கோடி நிதி வேறு பணிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது நீதிபதி நாகமோகன் தாஸ் குழுவை அமைத்தோம். சாக்கு போக்குகளை கூறுவதற்கு பதிலாக, பாஜக உடனடியாக அதை செயல்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in