புல்டோசர் விமர்சனம்: பிரதமர் மோடி மீது இந்தியா கூட்டணி தலைவர்கள் பாய்ச்சல்!

மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த இந்தியா கூட்டணி தலைவர்கள்
மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த இந்தியா கூட்டணி தலைவர்கள்

எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசர் கொண்டு இடித்து விடுவார்கள் என்ற பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் திங்கள்கிழமை 7 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அந்தத் தொகுதிகளுக்கு இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.

இந்நிலையில், பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று மும்பையில் இந்தியா கூட்டணி தலைவர்களான அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சிவசேனா (உத்தவ் பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே, என்சிபி (சரத்பவார் பிரிவு) தலைவர் சரத் பவார் ஆகியோர் இன்று மும்பையில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, ‘எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசர் கொண்டு இடித்து விடுவார்கள். எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்வார்கள். ஜம்மு - காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை மீண்டும் கொண்டு வருவார்கள்’ ஆகிய பிரதமர் மோடியின் எதிர்க்கட்சிகள் மீதான விமர்சனத்துக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் பதிலடி கொடுத்தனர்.

அப்போது மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “காங்கிரஸ் ஒரு போதும் சொல்லாதவற்றை சொன்னதாக கூறி, பிரதமர் மோடி மக்களிடையே பிரச்சினைகளை தூண்டிவிடுகிறார். அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடஒதுக்கீடு அப்படியே இருக்கும்.

தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி
தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி

நாங்கள் யாருக்கு எதிராகவும் ஒருபோதும் புல்டோசரை பயன்படுத்தியதில்லை. எனது 53 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் மக்களைத் தூண்டிவிட்டு சமூகத்தை பிளவுபடுத்தும் பிரதமரை நான் பார்த்ததில்லை. மோடியின் உத்தரவின் பேரில் எதிர்க்கட்சிகளை உடைக்க அச்சுறுத்தல், மிரட்டல், கவர்ச்சி உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், மக்கள் அவரை தோற்கடிப்பார்கள்." என்றார்.

உத்தவ் தாக்கரே கூறுகையில், "அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்தை இந்தியா கூட்டணி அரசு நிறைவு செய்யும். இந்தியா கூட்டணியில் பல பிரதமர் முகங்கள் உள்ளன. ஆனால் பாஜகவிடம் ஒன்று மட்டுமே உள்ளது. அதுவும் செயல்படவில்லை. எனது சிவசேனாவை போலி சிவசேனா என பிரதமர் மோடி கூறுகிறார். பாஜக ஆர்எஸ்எஸ்-யும் போலி என அழைக்கக்கூடும்.” என்றார்.

என்டிஏ கூட்டணி, இந்தியா கூட்டணி
என்டிஏ கூட்டணி, இந்தியா கூட்டணி

சரத் பவார் கூறுகையில், “கோயில்கள் மட்டுமல்ல; அனைத்து மதத்தினரின் வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாப்பது அரசின் கடமை. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் முடிவை முந்தைய அரசு எடுத்தது. ஆனால் இப்போது 5 கிலோ இலவச ரேஷன் வழங்கியதற்காக மோடி பெருமைப்படுகிறார்." என்று கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

லிவிங் டூ கெதர் வாழ்க்கை... நடிகை இறந்த ஒரே வாரத்தில் சின்னத்திரை நடிகரும் தற்கொலை!

சிறுவன் உயிரிழந்த விவகாரம்... குற்றாலம் அருவிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு!

அதிர்ச்சி... 4 மாதங்களில் 430 கொலைகள்... கதி கலங்க வைக்கும் புள்ளி விவரம்!

இசையமைப்பாளர் ரஹ்மான் மகளின் புது அவதாரம்... நெகிழ்ச்சி பதிவு!

அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பை எந்த அரசாலும் மாற்ற முடியாது... அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in