முக்கிய கட்சிகளை தெறிக்கவிடும் சுயேச்சை... கழுத்தில் செருப்பு மாலையுடன் தடாலடி பிரச்சாரம்!

தனி ஒருவராக தனது சின்னமான செருப்பு சின்னத்துடன் விழுப்புரம் தொகுதியில் வாக்கு சேகரிக்கும் சுயேச்சை வேட்பாளர் அரசன்
தனி ஒருவராக தனது சின்னமான செருப்பு சின்னத்துடன் விழுப்புரம் தொகுதியில் வாக்கு சேகரிக்கும் சுயேச்சை வேட்பாளர் அரசன்

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் அரசன் என்பவர் செருப்பு மாலை அணிந்து கொண்டு பல்வேறு இடங்களில் தன்னந்தனியாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

மக்களவை தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. பல இடங்களிலும் வார்த்தைப் போர்களும், மக்களை கவரும்படியான விநோத பிரச்சாரங்களும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. செல்லுமிடமெல்லாம் மக்கள் கூட்டத்தை கூட்டி பிரதான கட்சிகள் தங்களது பலத்தை நிரூபித்து வருகின்றன.

செருப்பு சின்னத்துடன் வாக்குச் சேகரிக்கும் சுயேச்சை வேட்பாளர் அரசன்
செருப்பு சின்னத்துடன் வாக்குச் சேகரிக்கும் சுயேச்சை வேட்பாளர் அரசன்

இந்த நிலையில் தான் விழுப்புரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் செருப்பு மாலையுடன் விநோத பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். விழுப்புரம் தொகுதியில் மொத்தம் 17 பேர் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். விசிக சார்பில் ரவிக்குமார், பாமக சார்பில் முரளி சங்கர், அதிமுக சார்பில் பாக்யராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் மு.களஞ்சியம் ஆகியோர் முக்கிய கட்சி வேட்பாளராக களமிறங்கியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்காக இவர்கள் சார்ந்த கட்சிகளின் தலைவர்களும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.

இந்நிலையில் இங்கு சுயேச்சையாக போட்டியிடும் அரசன் என்பவர் தனது வேட்பு மனுவில் தனக்கு 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு வீடு இருப்பதாகவும், கையிருப்பாக 24 ஆயிரம் ரூபாய் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

தனி ஒருவராக தனது சின்னமான செருப்பு சின்னத்துடன் விழுப்புரம் தொகுதியில் வாக்கு சேகரிக்கும் சுயேச்சை வேட்பாளர் அரசன்
தனி ஒருவராக தனது சின்னமான செருப்பு சின்னத்துடன் விழுப்புரம் தொகுதியில் வாக்கு சேகரிக்கும் சுயேச்சை வேட்பாளர் அரசன்

இவருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் செருப்பு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்களிடையே தன்னுடைய சின்னம் குறித்து விளக்கும் வகையில் அவர் கழுத்தில் செருப்பு மாலை அணிந்து கொண்டு தொகுதிக்குள் தன்னந்தனி ஆளாக நடந்தே சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

ஏற்கெனவே மூன்று முறை மக்களவை தேர்தலில் போட்டியிட்டு இருப்பதாகவும், ஒரு முறை கூட டெபாசிட் கிடைக்கவில்லை எனவும் அரசன் வருத்தம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை டெபாசிட் தொகை வாங்கும் அளவிற்காகவது வாக்குகள் வாங்க பிரச்சாரம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 69 வயதான அரசன் கொளுத்தும் வெயிலில் தன்னந்தனியாக சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருவதை தொகுதி மக்கள் சற்றே வித்தியாசமாகப் பார்க்கிறார்கள்.

தான் வெற்றி பெற்றால், 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிளும், 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச மோட்டார் சைக்கிளும் வழங்குவேன் என அவர் வாக்குறுதி அளித்துள்ளார். வேட்பாளர் அரசனின் இந்த பிரச்சாரம் வாக்காளர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.

அப்படியே நீங்க ஜெயிச்சு வந்து 6-ம் வகுப்பு பையனுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்தாலும் அதை ஓட்ட அவர்களுக்கு உரிமம் கிடைக்காதே அரசன் சார்!

இதையும் வாசிக்கலாமே...    

12ம் வகுப்பு வேதியல் தேர்வு... தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!

தலையில் விசிக; கழுத்தில் திமுக... பறையடித்து பட்டையைக் கிளப்பிய திமுக வேட்பாளர்!

பயங்கர தீ விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சாவு!

'மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்... ரசிகர்கள் வாழ்த்து!

ரயிலில் திடீரென ஸ்பைடர் மேனாக மாறிய வாலிபர்... வைரலாகும் அசத்தல் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in