இல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்... இனி ஞாயிற்றுக்கிழமையும் கியாஸ் வீடு தேடி வரும்!

எரிவாயு சிலிண்டர்
எரிவாயு சிலிண்டர்

வாடிக்கையாளர்கள் புக்கிங் செய்த ஒரே நாளில் எரிவாயு சிலிண்டர்களை சப்ளை செய்ய வேண்டுமென ஏஜென்சிகளுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிலிண்டர்களை சப்ளை செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வீட்டு உபயோகம் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

இதில் மிக அதிகப்படியான வாடிக்கையாளர்களை இந்தியன் ஆயில் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் இண்டேன் என்ற பெயரில் எரிவாயு சிலிண்டர்களை சப்ளை செய்து வருகிறது.

எரிவாயு சிலிண்டர்
எரிவாயு சிலிண்டர்

வாடிக்கையாளர்கள் சிலிண்டர் புக்கிங் செய்த 2-3 நாட்களுக்குள் இண்டேன் சிலிண்டரை அதன் ஏஜென்சிகள் சப்ளை செய்து வருகிறது. கிராமப்புற பகுதிகளில் சிலிண்டர் சப்ளைக்கு 4 முதல் 5 நாட்கள் வரை ஆகிறது.

ஆனால், கடந்த சில மாதங்களாக சப்ளை செய்யும் காலக்கெடுவை குறைத்திட இந்தியன் ஆயில் நிறுவனம் ஏஜென்சிகளுக்கு அறிவுறுத்தி வருகிறது. அதில், ஒரு வாடிக்கையாளர் சிலிண்டர் கேட்டு புக்கிங் செய்தால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வழங்கிட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

நகரப் பகுதிகளில் உள்ள இந்தியன் கியாஸ் ஏஜென்சிகள் இந்த உத்தரவை பின்பற்றி ஒரு நாளுக்குள் சிலிண்டர் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் சிலிண்டர் விநியோகம் ஒரு நாள் அல்லது இரண்டு நாளில் இருக்கிறது.

எரிவாயு சிலிண்டர்
எரிவாயு சிலிண்டர்

இதை இன்னும் வேகப்படுத்தி ஒரு நாள் என்ற நிலைக்குள் கொண்டு வர வேண்டுமென ஐஓசிஎல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது புதிய உத்தரவாக விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையும் சிலிண்டர் சப்ளை மேற்கொள்ள வேண்டும் என ஐஓசிஎல் நிறுவனம் தனது ஏஜென்சிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 1.48 கோடி வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு 925 எரிவாயு ஏஜென்சிகள் வாயிலாக தினமும் சராசரியாக 2.50 லட்சம் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

எரிவாயு சிலிண்டர் சப்ளை
எரிவாயு சிலிண்டர் சப்ளை

எரிவாயு ஏஜென்சி ஊழியர்கள் திங்கள் முதல் சனி வரை வாரத்திற்கு ஆறு நாட்கள் பணியாற்றி சிலிண்டர் சப்ளை செய்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் விடுமுறை எடுத்து வருகின்றனர். ஆனால், சில வாடிக்கையாளர்கள் கடைசி நேரத்தில் புக்கிங் செய்வதால், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிரமமின்றி அவர்களுக்கு எரிவாயு சிலிண்டரை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஐஓசிஎல் நிர்வாகம் ஏஜென்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பகீர்... 250 பாலஸ்தீன குழந்தைகள் மரணம்!

பிறந்து 72 நாட்களில் 31 வகையான சான்றிதழ்கள்... உலக சாதனை படைத்த குழந்தை

க்ளாமர் லுக்கில் கெத்து காட்டும் நயன்தாரா!

இடது பக்கம் அண்ணாமலை... நடுவில் முதல்வர் விஜய்யாம்... வலது பக்கம் டிடிவி; ரசிகர்களின் அட்ராசிட்டி போஸ்டர்

மாணவர்களுக்கு சப்ளை... உல்லாச வாழ்க்கை; 3,750 போதை மாத்திரைகளுடன் 4 இளைஞர்கள் கைது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in