அண்ணாமலைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: ஈபிஎஸ்சுக்கு பாதுகாப்பு குறைப்பு

அண்ணாமலைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: ஈபிஎஸ்சுக்கு பாதுகாப்பு குறைப்பு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

தமிழத பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதையடுத்து, தமிழக பாஜக தலைவராக 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அண்ணாமலைக்கு மாநில அரசால் ’ஒய் பிளஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பாக குறைத்தது தமிழக அரசு. அது குறித்து அண்ணாமலை தனது ஆட்சேபத்தை வெளிப்படுத்தியிருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தை சேர்ந்த நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்தார்.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற சம்பவங்களையடுத்து நுண்ணறிவு பிரிவினர் தயாரித்திருக்கக்கூடிய அறிக்கையில் தமிழக பாஜக தலைவராக செயல்பட்டு வரும் அண்ணாமலைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, நுண்ணறிவு பிரிவினர் தயார் செய்த அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது.

இந்நிலையில், அண்ணாமலைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பு தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலைக்கு 2 தனிப்பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 11 பேர் கொண்ட ஆயுதமேந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் மற்றும் மாநில காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவார்கள்.

இதே நேரத்தில், தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in