பொங்கல் பரிசுத் தொகுப்பில் முறைகேடு: இரண்டாவது நாளாக தொடரும் ரெய்டு

பொங்கல் பரிசுத் தொகுப்பில் முறைகேடு: இரண்டாவது நாளாக தொடரும் ரெய்டு

நியாய விலைக் கடைகளுக்கு பாமாயில், பருப்பு, சர்க்கரை உள்ளிட்டவற்றை சப்ளை செய்யும் நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாகச் சோதனை நடத்திவருகின்றனர்.

தமிழகத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு  மானிய விலையில் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அரசின் பொது விநியோகத் திட்டத்திற்காக சில குறிப்பிட்ட நிறுவனங்கள்   பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களை  சப்ளை செய்து வருகின்றன. 

கடந்த பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்த பரிசுத் தொகுப்பில் சுமார் 500 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இந்நிலையில் பொது விநியோகத்திட்டத்திற்கு பாமாயில், சர்க்கரை மற்றும் பருப்புகளை சப்ளை செய்யும் நிறுவனங்களுக்குச் சொந்தமான தமிழகத்தில் உள்ள 40 இடங்களில் நேற்று  வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதையடுத்து இன்றும் முக்கியமான இடங்களில் சோதனை தொடர்கிறது.

சென்னை, தண்டையார்பேட்டையில் உள்ள காமாட்சி அண்ட் கோ நிறுவனம் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்,  உலர் திராட்சை, முந்திரி, பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை விநியோகம் செய்து வருகிறது.  மண்ணடியில் உள்ள அருணாச்சலா இன்பாக்ஸ் என்கிற நிறுவனம் பருப்பு,  எண்ணைப் பொருட்கள் உட்பட உணவுப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்கிறது.  அதேபோல் தண்டையார்பேட்டையில் உள்ள பெஸ்டால் மில்,  சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இண்டர்கிரேட்டட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட என ஐந்து நிறுவனங்களுக்குத் தொடர்புடைய  இடங்கள்,  உரிமையாளர்கள் வீடுகள்,  பொருட்கள் வைத்திருக்கும் கிடங்குகள் , அலுவலகங்கள் ஆகியவற்றில் நேற்று சோதனை நடந்து வந்தது. இந்நிலையில் தண்டையார்பேட்டையில் உள்ள காமாட்சி அண்ட் கோ உள்ளிட்ட நிறுவனங்களில் உருவான வரித்துறையினர் இரண்டாவது நாளாக இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in