எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர் வீட்டில் மூன்றாவது முறையாக வருமானவரித்துறை அதிரடி ரெய்டு!

எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர் வீட்டில் மூன்றாவது முறையாக  வருமானவரித்துறை அதிரடி ரெய்டு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய ஆதரவாளரான சந்திரசேகர் வீடு உள்ளிட்ட 6 இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடந்த ஆட்சியில் 811 கோடி ரூபாய் டெண்டர் முறைகேடு செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த முறைகேட்டில் அரசியல்வாதிகள் மட்டுமின்றி ஐஏஎஸ் அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதால் அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதி வேண்டும் என்று தமிழக அரசிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கேட்டுள்ளது. எட்டு மாதங்களாகியும் இன்னும் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய ஆதரவாளரான சந்திரசேகரின் வீட்டில் இன்று வருமானவரி்த்துறையினர் சோதனை மேற்கொண்டனர். கோவை வடபள்ளியில் உள்ள சந்திரசேகர் வீடு, தோட்டம், அலுவலகம் மற்றும் பி.என்.புதூரில் உள்ள அவரது தந்தை வீடு உள்ளிட்ட 6 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, இரண்டு முறை சந்திரசேகர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது அம்மா' நாளிதழின் வெளியீட்டாளராக சந்திரசேகர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வருமானவரித்துறையினரின் இந்த சோதனை அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in