கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்... காங்கிரஸுக்கு அடுத்த அதிர்ச்சி!

டி. கே. சிவகுமார்
டி. கே. சிவகுமார்

கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கெனவே முடிந்துபோன விவகாரத்துக்காக வருமான வரித்துறை தனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டியுள்ளார்.

வருமானவரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறையை கொண்டு எதிர்க்கட்சிகளை முடக்க நினைக்கின்றனர். கர்நாடகத்தைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ஒருவரே 5 ஆண்டு காலம் வருமானவரி செலுத்தாமல் உள்ளார் என்று அவர் கூறினார்.

மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணி கட்சிகளை முடக்க சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை தீவிரம் காட்டி வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. கடந்த வாரம் முன்னர் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. நேற்று காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வரி பாக்கியை செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரங்கள் தொடர்பாக இந்தியாவின் எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளும் கருத்து தெரிவித்திருந்தன.

வருமான வரித்துறை
வருமான வரித்துறை

இந்நிலையில், தற்போது கர்நாடக மாநில துணை முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "நேற்றிரவு எனக்கு வருமான வரித்துறையினரிடமிருந்து நோட்டீஸ் வந்தது. ஏற்கெனவே முடிந்து போன விவகாரத்தில் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள். நாட்டின் சட்டங்களையும், அதை அமல்படுத்தும் அதிகாரிகளையும் பாஜக வளைத்திருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் இந்தியா கூட்டணி நிச்சயம் பதிலடி கொடுக்கும். தோல்வி பயத்தில்தான் அவர்கள் எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைக்கிறார்கள்" என்று விமர்சித்துள்ளார்.

டி. கே. சிவகுமார்
டி. கே. சிவகுமார்

கர்நாடக மக்களவைத் தேர்தலில் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 28 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சியாக உள்ள பாஜக தேவகவுடாவின் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...    

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவினர் மோதல்... கடலூரில் பரபரப்பு!

கமல் படத்திற்காக பிணத்திற்கு மேக்கப் போட்ட டேனியல் பாலாஜி!

பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை... வெளியானது அதிர்ச்சி வீடியோ!

ஆடுஜீவிதம் - சினிமா விமர்சனம்

மின்கம்பத்தில் மோதி சிதறிய இருசக்கர வாகனம்... கபடி வீரர்கள் இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in