பெண் குழந்தை பிறந்தால் இரண்டு லட்சம் ஊக்கத்தொகை... அசத்தல் அறிவிப்பை வெளியிட்டது மாநில அரசு

பெண் குழந்தை
பெண் குழந்தை

பெண் குழந்தை பிறந்தால் அதன் பெற்றோருக்கு  இரண்டு லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என இமாச்சல பிரதேச  அரசு அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது

நாட்டில் பல மாநிலங்களிலும் சமீப காலமாக பெண் சிசுக்கொலைகள் அரங்கேறி வரும் நிலையில் இதனை ஒழிப்பதற்காக பல்வேறு மாநிலங்களும் பல்வேறு விதங்களில் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும்  பிறந்தால் அவர்கள் பெயரில் தலா 25,000 ரூபாய் நீண்ட கால வைப்புத் தொகையாக டெபாசிட் செய்யப்படுகிறது.

அதுபோல  இமாச்சல பிரதேச அரசு பெண் குழந்தைகளின் நலனைக் காக்க  பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒற்றை பெண் குழந்தையை பெற்றுக் கொண்டால் அந்த குழந்தைக்கு  ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு இந்திராகாந்தி பாலிகா சுரக்ஷா யோஜனா திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.  

பெண் குழந்தை
பெண் குழந்தை

இதற்கு முன்னதாகவே இமாச்சல பிரதேசத்தில் இப்படி ஒரு திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு பெண் குழந்தை பிறந்தால்  ஊக்கத்தொகையாக  35 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த திட்டத்தில் தொகை உயர்த்தப்பட்டு இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஒரே பெண் குழந்தையின் பெற்றோருக்கு மட்டுமே இந்த இரண்டு லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in