`மேடையேறி பேசினால் கல்லெறி நிச்சயம்'- திமுக அரசின் ஓராண்டு நிறைவு குறித்து இன்பதுரை ட்வீட்

`மேடையேறி பேசினால் கல்லெறி நிச்சயம்'- திமுக அரசின் ஓராண்டு நிறைவு குறித்து இன்பதுரை ட்வீட்

"திமுகவின் ஓராண்டு ஆட்சி சாதனைகள் நிறைந்தது என்று யாராவது பொதுமக்கள் மத்தியில் மேடையேறி பேசினால் கல்லெறி நிச்சயம்" என்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை விமர்சித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதல்வர், ஓராண்டில் கடல்போன்ற விரிந்த சாதனைகளை செய்துள்ளோம். கலைஞரும், பேராசிரியரும் என்மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றியுள்ளேன்" என்று கூறியதோடு, பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்நிலையில், ஓராண்டு நிறைவு பெற்றுள்ள திமுக அரசை அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை கடுமையாக விமர்சித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், "திமுகவின் ஓராண்டு ஆட்சி சாதனைகள் நிறைந்தது என்று யாராவது பொதுமக்கள் மத்தியில் மேடையேறி பேசினால் கல்லெறி நிச்சயம்! வீடு கட்ட விரும்புபவர்கள் டிப்பர் லாரியுடன் சென்று தாராளமாக திமுக அரசை பாராட்டலாம்! அவ்வளவு கல் தேறும்!" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.