உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பு விழா: எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு!

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பு விழா: எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு!

தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நாளை பதவியேற்க உள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பிழ் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். தன் தொகுதி மக்களின் குறைகளை ஓடோடி சென்ற உடனடியாக நிவர்த்தி செய்து வருகிறார். இதனிடையே, உதயநிதியை அமைச்சராக வேண்டும் என்று பல்வேறு அமைச்சர்கள் முதல்வருக்கு கோரிக்கை வைத்து வந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது. நாளை அமைச்சராகப் பதவி ஏற்க உள்ளார் உதயநிதி. அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.

ஆளுநர் மாளிகையின் தர்பால் ஹாலில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமானவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. ஆனால், எதிர்க்கட்சித் துணை தலைவர் ஓபிஎஸ் பங்கேற்றார். தற்போது, உதயநிதி அமைச்சராக நாளை பதவியேற்க உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பது கடினம் என்று அதிமுக வட்டாரம் கூறுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in