சாதிய பாகுபாடு: அனைத்து கலெக்டர்களுக்கும் தலைமைச் செயலாளர் முக்கிய உத்தரவு

சாதிய பாகுபாடு: அனைத்து கலெக்டர்களுக்கும் தலைமைச் செயலாளர் முக்கிய உத்தரவு

ஒரு சில கிராம ஊராட்சிகளில் சாதியப்பாகுபாடுகள் காரணமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அவ்வாறு எந்த நிகழ்வுகளும் நடக்காமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில்," குடியரசு தினவிழா இணக்கமாக நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்,. தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலினத் தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றுவதில் எவ்வித பிரச்சினையும் வரக்கூடாது.

கிராமசபைக் கூட்டங்களில் ஊராட்சித்தலைவர்களைக் கண்ணியத்துடன் நடத்த வேண்டும். எவ்வித சாதிய பாகுபாடும் இருக்கக்கூடாது உரிய நடவடிக்கைகள் எடுக்கவும், ஏற்கெனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உரிய அறிக்கை அளிக்க வேண்டும்.

கிராம சபைக் கூட்டங்கள் நிறைவடைந்தவுடன் உரிய ஆதார நகல்களுடன் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்" என அவர் உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in