'கடற்கரையில் புதைக்கவிட்டதே தப்பு, கடலில் பேனா வைத்தால் உடைக்கத்தான் போகிறேன்'- ஆவேசமான சீமான்

சீமான் - கருத்துக்கேட்புக் கூட்டம்
சீமான் - கருத்துக்கேட்புக் கூட்டம்'கடற்கரையில் புதைக்கவிட்டதே தப்பு, கடலில் பேனா வைத்தால் உடைக்கத்தான் போகிறேன்' - ஆவேசமான சீமான்

சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பேனா நினைவு சின்னம் நிறுவுவதற்கான கருத்துக்கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக் கொண்டார்.

இந்த கூட்டத்தில் சீமான் பேசியதாவது, ‘’ கலைஞருக்கு நினைவுச்சின்னம் வைப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அதைக் கடலுக்குள்தான் வைப்போம் எனப் பிடிவாதம் பிடிப்பது ஏன்..? இந்த நினைவுச்சின்னத்தால் 13 மீனவ கிராமங்கள் பாதிக்கப்படும், கடலில் மேலும் அதிகம் மாசுகள் உருவாகும். இந்தத் திட்டம் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடாக இருக்கிறது.

எனவே, இந்தத் திட்டத்தை நாம் தமிழர் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. `கடலில்தான் பேனா சின்னம் வைப்போம்’ என அடம்பிடித்தால் அதை எதிர்த்து கடுமையான போராட்டத்தை முன்னெடுப்போம்.

கடற்கரையில் புதைக்கவிட்டதே தப்பு, கடலில் பேனா வைத்தால் உடைக்கத்தான் போகிறேன்' அரசுப் பள்ளிகளை சீரமைக்க நிதி இல்லை. ஆனால் பேனா நினைவுச்சின்னம் வைக்க மட்டும் நிதி இருக்கிறதா?" என ஆவேசமாக பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in