`லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவோம்'- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலகல

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்’’லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவோம்" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

``ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளர் அறிவிக்க 7-ம் தேதி வரை காலம் உள்ளது. லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவோம்'' என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுகவினர் தொடர்ந்து பண பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ‘’ ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தலை பொருத்தவரை திமுகவிற்கு முடிவெழுதும் வகையில் தான் இருக்கும். மக்களுக்கு நன்மை பயக்கும் எந்த ஒரு திட்டமும் திமுக அரசு கொடுக்கவில்லை. தினந்தோறும் கொலை, கொள்ளை போன்ற குற்றச்சாட்டு மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. 

இந்த தேர்தல் திமுகவிற்கு தக்க பதிலடி கொடுக்கும், அதன் எதிரொலி 2024 நாடாளுமன்ற தேர்தலில் இருக்கும். வேட்பாளர் அறிவிப்பு குறித்த கேள்விக்கு, 7ம் தேதி வரை காலம் உள்ளது, வேட்பாளர் யார் என்பதை சொல்வோம், களத்தில் நாங்கள் தான் இருக்கிறோம், நாங்கள்தான் வெல்வோம்; லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவோம’’ என அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in