`திமுக ஆட்சியில் இருக்கும் வரை இந்துக் கோயில்களுக்கு ஆபத்து'- சொல்கிறார் ஹெச்.ராஜா

`திமுக ஆட்சியில் இருக்கும் வரை இந்துக் கோயில்களுக்கு ஆபத்து'- சொல்கிறார் ஹெச்.ராஜா

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தமிழக பாஜக சார்பில் இந்து சமய அறநிலைத்துறை செயல்பாடுகளை கண்டித்து உண்ணாவிரடம் போராட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் வி.பி.துரைசாமி, ஹெச்.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஹெச்.ராஜா பேசுகையில், ``திராவிட மாடல் என்ற திருட்டுக் கும்பல் இருக்கும் வரை இந்து கோயில்களுக்கு ஆபத்துத்தான். பெரியாரை தந்தை பெரியார் என குறிப்பிடும் ஒருவரும் இந்துக்களுக்கு ஆதரவாக செயல்பட மாட்டார்கள் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

தமிழுக்கே விரோதி ஈ.வே.ரா, செந்தமிழ் எனும் போது வெங்காயம் பாயுது காதினிலே என கூறியவர் பெரியார். பாரதிதாசன் கூட தமிழகம் என்றுதான் குறிப்பிட்டார். பாரதியார் மட்டும் தான் தமிழ்நாடு என கூறினார். ஆனால் தமிழ்நாடு என கூறினால் காதில் வெங்காயம் பாயுது என குறிப்பிட்டவர் பெரியார் என்பது இந்த வெங்காயங்களுக்கு தெரியவில்லை.

சர்ச்சையாக நடந்துக் கொண்டது பெரியார். நான் சர்ச்சையாக பேசவில்லை. திராவிட மாடல் என கூறுபவர்கள் அனைவரும் திருடர்கள் தான். அண்ணா தொடங்கி ஸ்டாலின் வரை இந்து மதத்திற்கு விரோதமாக செயல்படுகின்றனர்.

இவர்களுக்கு தக்கப்பாடம் புகட்ட வேண்டும். கோயில்களை இடிப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆளுநருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆர்.எஸ்.பாரதியை ஏன் கைது செய்யவில்லை. சென்னையை மத்திய அரசின் கட்டுபாட்டில் கொண்டு வர சட்டத்தில் இடம் உள்ளது. அதனை ஆளுநர் நினைத்தால் செய்ய முடியும். இவர்களுக்கு சட்டம் தெரியாது. மாநிலத்தின் முதலமைச்சர் ஆளுநரை ஒருமையில் பேசலாமா..? பேசியுள்ளார். திருமாவளவனும், சீமானும் தேச விரோதிகள். தேசப்பக்தர்களை தமிழக டிஜிபி டார்ச்சர் செய்கிறார்'' என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in