நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா சரண்

மோசடி வழக்கில் ரூ.25 லட்சம் செலுத்தி ஜாமீன் பெற்றார்
நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா சரண்

மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா, ராசிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதுப்பாளையம் சாலையைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க மேலாளர் குணசீலன் (65). இவர் முன்னாள் சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜாவின், அண்ணன் மருமகன். இவர் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி ராசிபுரம் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் வி.சரோஜா மீது பண மோசடி செய்ததாக புகார் மனு அளித்தார்.

இந்த புகாரில் சத்துணவு திட்டத்துறையில் வேலை வாங்கித் தருவதாக 15 பேர் தன்னிடம் ரூ.76.50 லட்சம் பணம் அளித்தனர். அந்த தொகையை அமைச்சர் சரோஜாவிடம் வழங்கினேன். எனினும், அவர் வேலை எதுவும் வாங்கித் தரவில்லை என குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் முன்னாள் அமைச்சர் சரோஜா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் சரோஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் ராசிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தது ஜாமீன் பெற்றுக் கொள்ளும்படி உத்தரவிட்டது. இதன்பேரில் முன்னாள் அமைச்சர் சரோஜா இன்று ராசிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பிணைத் தொகை ரூ.25 லட்சத்துடன் சரணடைந்து உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக குணசீலன் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in