பாஜக ஆளும் 10 மாநிலங்களில் ஒரு முதல்வர் மட்டுமே ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்... ராகுல் காந்தி சாடல்!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பாஜக ஆளும் 10 மாநிலங்களில் ஒரு முதலமைச்சர் மட்டுமே ஓபிசி பிரிவை சேர்ந்தவர். எனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் ஆற்றலும், துணிச்சலும் மோடிக்கு இல்லை என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டம் முடிந்த பின், செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் அறிவித்தார்.

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியதையடுத்து, நாடு முழுவதும் அதற்கான சூழலை எதிர்க்கட்சிகள் உருவாக்கி வருகின்றன. இப்பொது, சாதிவாரி கணக்கெடுப்பை நாடு முழுவதும் நடத்த வேண்டும் என ராகுல் காந்தி கூறினார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மேலும், காங்கிரஸ் ஆளும் 4 மாநிலங்களில் 3 முதலமைச்சர்கள் ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள். ஆனால், பாஜக ஆளும் 10 மாநிலங்களில் ஒரு முதலமைச்சர் மட்டுமே ஓபிசி பிரிவை சேர்ந்தவர். இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் ஆற்றலும், துணிச்சலும் மோடிக்கு இல்லை என்று டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in