தமிழக மீனவர்கள் 3 பேருக்கு சிறை தண்டனை... இலங்கை நீதிமன்றம் அதிரடி!

மீனவர்களுக்கு சிறை தண்டனை
மீனவர்களுக்கு சிறை தண்டனை
Updated on
2 min read

கைது செய்ய்யப்பட்ட தமிழக, காரைக்கால் மீனவர்கள் 2 பேருக்கு 6 மாத சிறை தண்டனையும், ஒருவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆழ்கடலில் மீனவர்கள்
ஆழ்கடலில் மீனவர்கள்

கடந்த 17-ஆம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்துச்சென்றது. இதேபோல் காரைக்கால் மீனவர்கள் 15 பேரை கடந்த 15-ஆம் தேதி இலங்கை கடற்படை கைது செய்தது. இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களில், இரண்டு மீனவர்களுக்கு தலா 6 மாதம் சிறை மற்றும் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட மேலும் ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை படை
இலங்கை படை

இதில், ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட மீனவர் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர். ராமேஸ்வரத்தை சேர்ந்த மற்றொரு மீனவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காரைக்காலை சேர்ந்த 15 மீனவர்களில் ஒரு மீனவருக்கு மட்டும் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் ராமேஸ்வரம், காரைக்காலை சேர்ந்த 33 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை படையினரால் கைது செய்யப்படுவதும், பின்னர் விடுவிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. எனினும் இதில் சில மீனவர்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படுவதால் அவர்களின் குடும்பம் நிற்கதியாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அண்மை காலமாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இலங்கை படையினரின் அட்டூழியத்தை மத்திய மாநில அரசுகள் தடுக்காவிட்டால், மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என மீனவ அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் தமிழகத்தில் பதுங்கலா?... 5 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

வெயிலுக்கு இதம் தரும் ஜில் தகவல்... தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in