தமிழக பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்... அதிகாரிகளுடன் ஸ்பெயினிலிருந்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து அரசு உயர் அதிகாரிகளுடன் ஸ்பெயினில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழக சட்டசபை கூட்டம், வரும், 12-ம் தேதி துவங்குகிறது. 19ம் தேதி 2024 - 25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் ஸ்பெயின் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் 12- ம் தேதி தொடங்க உள்ள சட்டசபை கூட்டத்தொடரில் கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும், 19-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கை குறித்தும் நிதித்துறை முதன்மைச் செயலாளர், வளர்ச்சித்துறை ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஸ்பெயினில் இருந்து காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.



தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற பிப்ரவரி 12ம் தேதி துவங்குகிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் துவங்கும். வருகிற 19ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார். பிப்ரவரி 20ம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார். அதனைத் தொடர்ந்து முன்பண மானிய கூட்டம் நடைபெறும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in