`ஒரு மாவட்டத்திற்கு ஒரு பொருள்; ஒன்றிய அரசின் திட்டத்தை செயல்படுத்துங்கள்'- முதல்வர் ஸ்டாலின்

`ஒரு மாவட்டத்திற்கு ஒரு பொருள்; ஒன்றிய அரசின் திட்டத்தை செயல்படுத்துங்கள்'- முதல்வர் ஸ்டாலின்

``ஒரு மாவட்டத்திற்கு ஒரு பொருள் என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை செயல்படுத்த ஏற்றுமதியாளர்கள் முன்வர வேண்டும்'' என இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தென்பிராந்திய விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தென் மண்டலத்தில் ஏற்றுமதியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. இந்திய அளவில் மூன்றாவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. படிப்படியாக ஏற்றுமதி அதிகரிக்கப்பட்டு ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மையான மாநிலம் என்ற நிலையை அடைய வேண்டும். இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பில் உள்ள 35 ஆயிரம் ஏற்றுமதியாளர்களில், 5000 பேர் தமிழர்கள் என்பதில் பெருமை கொள்கிறேன். தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் 24 பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்க தமிழக அரசு சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

2030-ம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியில் தமிழ்நாடு இன்னும் பன்மடங்கு உயரும் நிலையை உருவாக்கும் வகையில், ஏற்றுமதியை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை உருவாக்கியுள்ளது. ஒரு மாவட்டத்திற்கு ஒரு பொருள் என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை செயல்படுத்த ஏற்றுமதியாளர்கள் முன்வர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in