‘தமிழகம்’ என்பது சட்டவிரோத வார்த்தையா?- வானதி சீனிவாசன் காட்டம்

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

``தமிழகம் என்பது சட்டவிரோத வார்த்தையா?” என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம், பொங்கல் விழா தொடர்பாக ஆளுநர் அழைப்பிதழ் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், ``ஆளுநர் ஒரு கருத்தை சொல்கிறார். ஆளுநர் சொல்லும் கருத்துகளுக்கு மாற்று கருத்துகள் இருந்தால் கருத்துகளால் எதிர்கொள்ளலாம். அதனை விடுத்து போஸ்டர் அடித்து ஒட்டுவது, போராடும் மனநிலைக்கு வருவது எந்தளவுக்கு கருத்துகளுக்கு மரியாதை கொடுக்கும் பண்பு உள்ளது என்பதையே காட்டுகிறது.  தெருச்சண்டை போல தங்கள் தகுதியை குறைத்துக் கொண்டுள்ளனர்.

தமிழக ஆளுநர் என மீடியாக்கள் குறிப்பிடுவது இல்லையா அல்லது மாநில அரசு தங்களுடைய விளம்பரத்தில் தலை நிமிர்கிறது  தமிழகம் என சொல்லவில்லையா? தமிழகம் என்ன சட்டவிரோத வார்த்தையா? இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான வார்த்தையா? ஏன் இப்படி ? பேசுவதற்கு மக்கள் பிரச்சினை நிறைய உள்ளது. பால் விலை ஏற்றம், மின் கட்டணம் உயர்வால் மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இதை திசை திருப்பும்  விதமாக பிரச்சினையாக கிளப்புகின்றனர்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in