`உண்மையை சொல்லியிருக்கிறார் இளையராஜா'- சொல்கிறார் அண்ணாமலை

`உண்மையை சொல்லியிருக்கிறார் இளையராஜா'- சொல்கிறார் அண்ணாமலை

"பிரதமர் மோடி குறித்து மனதில் பட்ட உண்மையை உள்ளபடியே சொல்லியிருக்கிறார் இளையராஜா" என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

'புளூ கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்' என்ற நிறுவனத்தின், 'அம்பேத்கரும் மோடியும் சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும், செயல் வீரர்களின் நடவடிக்கையும்' என்ற நுாலுக்கு இளையராஜா அணிந்துரை எழுதி உள்ளார். அதில், அம்பேத்கரை தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. அவரது மதிப்பை உணர்ந்து, அவரது சிந்தனைகளை நடைமுறைப்படுத்தி வருபவர்களை ஊக்குவிக்க வேண்டும். பிரதமர் மோடியின் ஆட்சியில், தொழில் துறை, சமூக நீதி, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் என, பல்வேறு துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்கு, அம்பேத்கரின் சிந்தனைகள் எந்த அளவுக்கு உதவியுள்ளது. மோடி ஆட்சியில், உலகத்தரமான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அம்பேத்கரும், மோடியும், ஏழ்மையையும், ஒடுக்கு முறைகளையும் அனுபவித்ததுடன், அதை ஒழிப்பதற்காக பாடுபட்டவர்கள். இருவரும், இந்தியா பற்றி பெரிதாக கனவு கண்டவர்கள்" என்று கூறப்பட்டிருந்தது.

இளையராஜாவின் இந்த கருத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், "இசைஞானி இளையராஜா பாவம். இளையராஜா போன்றவர்களை குறி வைப்பதே ஆர்எஸ்எஸ்காரர்களின் முக்கிய நோக்கம். ஆர்எஸ்எஸை சேர்ந்தவர்கள் இளையராஜாவிற்கு நெருக்கடி அளித்து இக்கருத்தை பெற்றிருக்கூடும்" என்று தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in