`நீண்ட ஆயுள், நிறைந்த செல்வத்தோடு வாழுங்கள்'- முதல்வர் ஸ்டாலினுக்கு இளையராஜா பிறந்தநாள் வாழ்த்து!

முதல்வர் ஸ்டாலின்- இளையராஜா
முதல்வர் ஸ்டாலின்- இளையராஜா `நீண்ட ஆயுள், நிறைந்த செல்வத்தோடு வாழுங்கள்'- முதல்வர் ஸ்டாலினுக்கு இளையராஜா பிறந்தநாள் வாழ்த்து!

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தனது 70-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், இசையமைப்பாளர் இளையராஜா தற்போது தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இசைக் கச்சேரியில் பங்கேற்றுள்ளார். அங்கிருந்து வீடியோ மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அதில் பேசும் இளையராஜா, "தன்னுடைய 70-வது பிறந்தநாளை கொண்டாடும் தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளோடு, நிறைந்த செல்வத்தோடு, ஓங்கு புகழோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in