இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம்: பிரதமர் மோடி நாளை வழங்குகிறார்

இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம்: பிரதமர் மோடி நாளை வழங்குகிறார்

காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பிரதமர் மோடி நாளை கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறார்.

திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் 2018- 2019 ஆண்டுகள் மற்றும் 2019 -2020ம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார்.

இந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்குகிறார். மேலும் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தனி விமானத்தில் நாளை மதுரை வருகிறார். பிரதமர் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் நேற்று முதல் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in