'மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களே...' - இளையராஜா வைத்த முக்கிய கோரிக்கை!

இளையராஜா
இளையராஜா

தமிழக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நடிகரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு பிரபல இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்

சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் நேற்று அமைச்சராக பதவி ஏற்று கொண்டார். அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்பு திட்டங்கள் அமலாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவருக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இளையராஜாவும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து ஆடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

நீங்கள் அரசியல் களத்தில் இறங்கி விட்டீர்கள். ஆனாலும் அமைச்சர் பதவி எனும்போது பொறுப்பு கூடுகிறது.இந்த அமைச்சர் பதவியை பயன்படுத்தி நல்ல முறையில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அந்தப்பொறுப்பை சரிவர நிறைவேற்றி மக்களிடம் நல்ல பெயரும் புகழும் அடைய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். இதை கண்டிப்பாக நிறைவேற்றுவீர்கள் என நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in