ராதிகா கெரா
ராதிகா கெரா

இந்து எதிர்ப்பு சித்தாந்தத்தை பின்பற்றாததால் காங்கிரஸிலிருந்து புறக்கணிக்கப்பட்டேன்... ராதிகா கெரா ஆவேசம்!

காங்கிரஸில் இருந்து விலகிய அக்கட்சியின் தகவல் தொடர்பு துறையின் தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளர் ராதிகா கெரா, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தன்னை அவமரியாதை செய்வது குறித்து கட்சியின் உயர்மட்ட தலைமைக்கு தெரிவித்தும் அவர்கள் யாரும் தனக்கு உதவவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நீதி யாத்திரையின்போது, கட்சியின் சத்தீஷ்கர் ஊடக பிரிவு தலைவர் சுஷில் ஆனந்த் சுக்லா எனக்கு மது கொடுத்து அருந்தும்படி கூறினார். அவருடன் இன்னும் சில நிர்வாகிகள் போதையில் என் அறையின் கதவை தட்டினர். அவர்களின் அத்துமீறல் பற்றி சச்சின் பைலட், ஜெய்ராம் ரமேஷ், பூபேஷ் பாகேல் மற்றும் பவன் கேரா ஆகியோரிடம் தெரிவித்தேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை.

ராதிகா கெரா
ராதிகா கெரா

காங்கிரஸ் கட்சி ராமருக்கு எதிரானது, சனாதனத்திற்கு எதிரானது, இந்துக்களுக்கு எதிரானது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதை நான் நம்பவே இல்லை. மகாத்மா காந்தி ஒவ்வொரு கூட்டத்திலும் 'ரகுபதி ராகவ ராஜா ராம்' என்று கூறி தனது உரையை தொடங்குவார். நான் என் பாட்டியுடன் ராமர் கோவிலுக்கு சென்று, அங்கிருந்து திரும்பியதும், என் வீட்டு வாசலில் 'ஜெய் ஸ்ரீராம்' கொடியை ஏற்றினேன். இதனால் காங்கிரஸ் கட்சி என்னை வெறுக்கத் தொடங்கியது. இதுபற்றி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிடும் போதெல்லாம், தேர்தல் பணிகள் நடக்கும் சமயத்தில் ஏன் அயோத்திக்கு சென்றீர்கள்? என்று என்னைத் திட்டினார்கள். காங்கிரஸ் கட்சியின் இந்து எதிர்ப்பு சித்தாந்தத்தை நான் பின்பற்றாததால் கட்சி தலைமை என்னை புறக்கணித்தது.

காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோரை சந்திக்க மூன்று ஆண்டுகளாக முயற்சி செய்தேன். அவர்கள் யாரும் என்னைச் சந்திக்கவில்லை. நான் எப்போதும் ஒரு அலுவலகத்திலிருந்து மற்றொன்றுக்கு அலைக்கழிக்கப்பட்டேன்.

ராதிகா கெரா
ராதிகா கெரா

பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் போது ராகுல் காந்தி யாரையும் சந்திக்கவில்லை. மக்களிடம் 5 நிமிடம் மட்டுமே கை அசைத்துவிட்டு தனது கேரவனுக்கு திரும்பிச் சென்றார். அவரது நியாய யாத்ரா பெயருக்காக இருந்தது, அவர் ஒரு பயண வலைப்பதிவாளராக மாற விரும்புகிறார் என்று நான் நினைக்கிறேன். அவர் அங்கு டிராவல் வ்லாக்கிங் செய்து கொண்டிருந்தார். அதேபோல நான் பிரியங்கா காந்தியை சந்திக்க முயற்சித்தேன்,அவரும் அவர் யாரையும் சந்திக்கவில்லை. அவர் ‘நான் ஒரு பெண், என்னால் சண்டையிட முடியும்’ என்கிறார், ஆனால் பெண் என்றால் அடிபடுவீர்கள் என்பதுதான் காங்கிரஸின் முழக்கம்" என்று அவர் கூறினார்.

மேலும், “கடந்த 30-ம் தேதி மாலை மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் சுஷில் ஆனந்த் சுக்லாவிடம் பேசச் சென்றபோது அவர் என்னை திட்டினார். என்னை அறையில் வைத்து பூட்டியதுடன், அவரும் மற்ற இரண்டு மாநில செய்தித் தொடர்பாளர்களும் என்னிடம் அவமரியாதையாக நடந்துகொண்டனர். நான் கத்தி கூச்சலிட்டேன். ஆனால் யாரும் கதவை திறக்கவில்லை. இதுகுறித்து எந்த காங்கிரஸ் தலைவருடன் பேசினாலும், ஒவ்வொருவரும் என்னை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டனர். கட்சியுடன் ஒத்துழைக்காததற்காக என்னையே திட்டினார்கள்” என்று அவர் தெரிவித்தார்

இதையும் வாசிக்கலாமே...

பிளஸ் டூ மாணவர்களே... மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

வாயில் மலத்தை வைத்துக் கொண்டு பேசாதீர்கள்... வைரமுத்துவுக்கு கண்ணதாசன் மகன் எச்சரிக்கை!

குமரியில் பெரும் சோகம்... கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி!

வெட்டிப்போட்ட சாதி; கைதூக்கி விட்ட கல்வி... சாதித்துக் காட்டிய நாங்குநேரி மாணவர் சின்னதுரை!

பகீர்... முதலைகள் உள்ள கால்வாயில் 6 வயது மகனை வீசிய பெற்றோர்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in