தொப்பி, கண்ணாடி அணிந்தால் நீங்கள் எம்ஜிஆரா?: எடப்பாடி பழனிசாமிக்கு வி.பி.துரைசாமி கேள்வி

பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி
பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமிதொப்பி, கண்ணாடி அணிந்தால் நீங்கள் எம்ஜிஆரா?: எடப்பாடி பழனிசாமிக்கு வி.பி.துரைசாமி கேள்வி

தொப்பி, கண்ணாடி அணிந்திருந்தால் ஈபிஎஸ் எம்ஜிஆரா? எங்களைப் பொறுத்தவரை ஒரே ஒரு எம்ஜிஆர் தான் என தமிழக பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை தி. நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ‘’கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரசாரம், மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை நல்லாட்சி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்கள் காரணமாக கர்நாடகா தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவோம். ராகுல் காந்தி தகுதிநீக்க விவகாரத்தை பத்திரிகையாளர்கள் சரியாக எடுத்து செல்லவில்லை. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுப்படுத்தியதற்காக தான் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்" என்றார்.

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த வி.பி.துரைசாமி, " தொப்பி, கண்ணாடி அணிந்தால் எம்ஜிஆரா? எங்களுக்கு தெரிந்தது ஒரே எம்.ஜி‌.ஆர்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in