அண்ணாமலை
அண்ணாமலை

தொட்டுப்பார்... சீண்டிப்பாருன்னு பேசுனா ஆளுநர் கொத்தத் தான் செய்வார்... அண்ணாமலை ஆவேசம்!

''திமுகவினர் ஆளுநரை வம்புக்கு இழுக்கின்றனர். தொட்டுப்பார், சீண்டிப்பார் என்றெல்லாம் ஆளுநரை நோக்கி பேசுகிறார்கள், பாம்பிடம் சீண்டுவது போல், திமுக ஆளுநரிடம் சீண்டினால் அவர் கொத்தத் தான் செய்வார்'' என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘’தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கு வர வேண்டிய இஸ்ரோ, ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவிற்கு சென்றதற்கு காரணம் அன்றைய திமுக அரசின் தவறான நடவடிக்கைகள் தான் என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும்.

சந்திரயான் 1,2,3 என மூன்று தமிழர்களும் தேசியத்தை நம்புகிறவர்கள். தன்னைத் தாண்டி நாடு பாரதம் என நினைக்கக் கூடியவர்கள். சந்திரயானை இயக்கிய மூன்று தமிழர்களும் நமக்கு கூறும் பாடம் ஒன்று தான். கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை என நம்மை சுருக்கிக் கொள்ளக் கூடாது என்பதை உணர்த்துக்கிறார்கள்.

நடக்க முடியாதவர்கள், நான் நடப்பதைப் பார்த்து விமர்சனம் செய்கிறார்கள். தமிழக அரசியல் களம் மாறியுள்ளது என்பது அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை. ஒரு நாளைக்கு 9 கிலோ மீட்டர் நடந்துள்ளோம். இந்த யாத்திரை முடிந்த பின், தமிழகத்தில் அதிகமாக நடந்த கட்சி பாஜகவாக தான் இருக்க முடியும். என் மண் என் மக்கள் யாத்திரை முடியும் போது தமிழகத்தின் அரசியல் புரட்சியாக இருக்கும்

பகவத்கீதையை விட பைபிலும், குரானுமே அதிகளவில் எனக்கு பரிசாக வந்துள்ளது. அதனால் இனிமேல் இந்த வண்டி ஓடாது என்பதை பொன்முடி போன்றவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஆளுநரை பொறுத்தவரை நீட் குறித்து பேசுவதில் எந்த தவறுமில்லை. நீட் தேர்வு விவகாரத்தில் தேவையில்லாமல் திமுகவினர் ஆளுநரை வம்புக்கு இழுக்கின்றனர். தொட்டுப்பார், சீண்டிப்பார் என்றெல்லாம் ஆளுநரை நோக்கி பேசுகிறார்கள், பாம்பிடம் சீண்டுவது போல், திமுக ஆளுநரிடம் சீண்டினால் அவர் கொத்தத் தான் செய்வார்.

ஆளுநரைச் சீண்டிப் பார்க்க வேண்டும் என்று சம்பந்தமில்லாமல் பேசுவது தவறு. அவரை தமிழ்நாட்டில் போட்டி போட அழைப்பது போல, ஆளுநர் பீகாருக்கு போட்டி போட அழைத்தால், திமுகவினர் இந்தி தெரியாமல் எங்கே போவார்கள். ஆளுநரை எதிர்த்து கருப்புக் கொடி கட்டுவதால் எதுவும் நடக்கப் போவதில்லை’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in