‘அநாவசியமாய் வெயிலில் அலைந்தால் வெப்ப பக்கவாதம் தாக்கும்’ -மருத்துவராக எச்சரிக்கும் தமிழிசை!

ஆளுநர் தமிழிசை
ஆளுநர் தமிழிசைதேவையில்லாமல் வெயிலில் சென்றால் ’வெப்ப பக்கவாதம்’ வரும் - எச்சரிக்கும் ஆளுநர் தமிழிசை!

வெயில் வாட்டி வதைக்கும் வேளையில் தேவையில்லாமல் வெயிலில் செல்வதனால், வெப்ப பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

குருப்பெயர்ச்சியை ஒட்டி சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”காலை முதலே வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். மேலும் குளிர்பானங்கள் தான் குடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை அதிக அளவில் நீரை பருகியும் தற்காத்துக் கொள்ளலாம். தேவையில்லாமல் வெயிலில் செல்வதனால், வெப்ப பக்கவாதம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் வழக்கத்தை விட, வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு அறநிலையத்துறை சார்பில் தண்ணீர் பந்தல் மற்றும் ஓய்வு அறை போன்றவையும் அமைத்துத் தர வேண்டும்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in