`சேது சமுத்திர திட்டம் நிறைவேறினால் டி.ஆர்.பாலு, கனிமொழிக்கு மட்டுமே பயன்'- சொல்கிறார் அண்ணாமலை

`சேது சமுத்திர திட்டம் நிறைவேறினால் டி.ஆர்.பாலு, கனிமொழிக்கு மட்டுமே பயன்'- சொல்கிறார் அண்ணாமலை

"சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால் பயன்பெறப் போவது மீனவர்கள் அல்ல. முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மற்றும் கனிமொழி ஆகிய இருவர் மட்டுமே பயன்பட உள்ளனர்" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

நெல்லையில் நடைபெற்ற இந்திரவிழாவில் கலந்துகொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், "2008-ம் ஆண்டு மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசில் கொண்டுவரப்பட்ட அலைன்மென்ட் ஏ படி அந்த சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தினால் அங்குள்ள உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும். சட்டபேரவையில் சேது சமுத்திர திட்டத்திற்கு திமுக தீர்மானம் கொண்டு வந்துள்ளது. பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் அது குறித்து சிறப்பாக பேசியுள்ளார். ராம சேது பாலத்திற்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என நயினார் நாகேந்திரன் சட்டபேரவையில் தெரிவித்துள்ளார்.

வேறு வடிவத்தில் சேது சமுத்திர திட்டத்தை கொண்டுவர திட்டம் மார்ச் 2018-ல் உச்சநீதிமன்றத்தில் பாஜக அரசு தெரிவித்துள்ளது. கடந்த காலத்தில் உள்ள நிகழ்வுகளை தமிழக முதல்வருக்கு நினைவு கூற பாஜக கடமைப்பட்டுள்ளது. சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால் பயன்பெறப் போவது மீனவர்கள் அல்ல. முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மற்றும் கனிமொழி ஆகிய இருவர் மட்டுமே பயன்பட உள்ளனர்.

சேது சமுத்திரத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மீனவர்கள் பயன்பெறப் போவதில்லை. தமிழக முதலமைச்சர் கொண்டு வந்துள்ள சேது சமுத்திர திட்டம் தொடர்பான தீர்மானம் பிராடு தீர்மானம். பொய்யான தகவல்களை இந்த தீர்மானத்தில் தமிழக முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். நீதிமன்றத்தில் போராடி இந்த திட்டம் வேண்டாம் என்று சொன்ன பிறகு அரசியல் காரணங்களுக்காக தள்ளிப் போடப்பட்டதாக எப்படி சொல்ல முடியும். 20 ஆயிரம் டன் உள்ள கப்பல் 4ஏ வடிவத்தில் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்த முடியாது என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அமைச்சர் நாடாளுமன்றத்தில் ராம சேது பாலம் இருக்கிறதா என்பதற்கு தெளிவான பதில் இல்லை.

18 ஆயிரம் ஆண்டுக்கும் முன் இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது. அதற்கான ஒரு சில தடம் இருந்ததாகத் தான் சொல்லியுள்ளனர். அமைச்சர் கருத்து திரித்து பேசியதற்கு சட்டப்பேரவை உறுப்பினர்களிடமும் மத்திய அமைச்சரிடமும் முதல்வர் மன்னிப்பு கேட்கவேண்டும்.

சேது சமுத்திர திட்டம் 4 ஏ என்றால் அதனை பாஜக எதிர்க்கிறது. இப்போது உள்ள வடிவத்தில் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால் பொருளாதார அளவில் எந்த பலனும் இல்லை என்று பச்சூரி கமிட்டி ஆய்வறிக்கை சொல்லியுள்ளது. சுனாமி உலகில் வருவதற்கு அதிகமான 2-வது சாத்தியக்கூறு உள்ள பகுதி சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட உள்ள பகுதி. 4 ஏ வடிவத்தில் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்த முடியாது. இதற்கு மத்திய அரசு அனுமதி இல்லை. பிரதமர் மோடி 2024க்குள் ராம சேது பாலம் குறித்து ஆய்வு செய்ய கமிட்டி அமைத்து ஆய்வு நடந்து வருகிறது. அந்த ஆய்வு அறிக்கை வந்த பின்னர் தான் ராம சேது பாலம் பாரம்பரிய சின்னமாக மாறுமா என்பது தெரியும்.

சேது சமுத்திர திட்டம் அரசியல் காரணத்திற்காக தான் நிறுத்தப்பட்டதாக சொன்னதற்கு விளக்கம் அளிக்கவேண்டும். காவல்துறை எனது கட்டுபாட்டில் இல்லை. எனது கட்டுபாட்டில் காவல்துறை கொண்டுவந்தால் சுபஸ்ரீ மரணம் குறித்து ஒருவாரத்திலும், புதுக்கோட்டை மலம் கலந்த சம்பவம் 2 நாளிலும் கண்டுபிடிக்கமுடியும். காவல்துறை இரண்டு சம்பவத்திலும் நடந்த சம்பவம் குறித்து அறிந்தும் அதனை வெளியிடக்கூடாது என நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறார்கள். புதுகோட்டை சம்பவம் மற்றும் சுபஸ்ரீ மரணம் குறித்து தமிழக அரசு உணமையை வெளியிட வேண்டும்.

காங்கிரஸ் காலத்தில் நியமிக்கபட்ட குடியரசுத் தலைவர் எப்படி இருந்தார்கள் என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் ஒரு குடியரசுத் தலைவர் சோனியாகாந்தி இல்லத்தில் தான் பல நேரம் இருந்தார். ஊழியர் என்ற வார்த்தையை காங்கிரஸ் கட்சி பயன்படுத்தகூடாது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட ஆளுநர் எப்படி இருந்தார் என்பதை அவர்கள் உணரவேண்டும். இப்போது உள்ள ஆளுநர்கள் தகுதியானவர்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது ஆளுநர் செய்யும் செயல் ஒரு நியாயம். இப்போது முதல்வரான பிறகு ஒரு நியாயம். எனக்கு வழங்கும் பாதுகாப்பு ஒருவித நெருடலாக உள்ளது. மத்திய அரசு உளவுத்துறை சொன்ன தகவலை அடிப்படையில் பாதுகாப்பை உயர்த்தி இருக்கலாம். இந்தியாவில் குறைவாக உள்ள நபர்களுக்கு மட்டுமே இசட் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நாங்க பாதுகாப்பை ஒரு கட்டுப்பாடாக பார்க்கிறேன். மத்திய அரசு உளவுத்துறை ஆய்வு செய்து சொல்லும்போது அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in