`காங்கிரஸ் விரும்பினால் 2024 தேர்தலில் இணைந்து போட்டியிடலாம்'

மம்தா பானர்ஜி அழைப்பு
`காங்கிரஸ் விரும்பினால் 2024 தேர்தலில் இணைந்து போட்டியிடலாம்'

"காங்கிரஸ் கட்சி விரும்பினால் நாம் அனைவரும் இணைந்து 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடலாம்" என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய இடங்களில் பாஜகவும், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மியும் ஆட்சியை கைப்பற்றியது. இந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்துள்ளது.

இந்த தோல்வி காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 2024ம் ஆண்டு நடைபெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தலின்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரே குறிக்கோளோடு செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், "காங்கிரஸ் கட்சி விரும்பினால் நாம் அனைவரும் இணைந்து 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடலாம். 5 மாநில தேர்தல் முடிவுகளை கண்டு சோர்வடைய வேண்டாம். நேர்மறையாக சிந்திக்க வேண்டும். தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் மோசடி செய்து பாஜக வெற்றி பெற்றுள்ளது. 5 மாநில தேர்தல் முடிவுகள் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பது சாத்தியமற்றது" என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in