தென்மாநிலங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால் தனி நாடு கேட்போம் - காங்கிரஸ் எம்.பியின் கலகக் குரல்!

டி.கே.சுரேஷ்
டி.கே.சுரேஷ்

தென் இந்தியா மாநிலங்களுக்கு மத்திய அரசு உரிய நிதி வழங்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால் தென் மாநிலங்கள் தனி நாடு கோரிக்கையை எழுப்புவோம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் சகோதரரும், காங்கிரஸ் எம்.பியுமான டி.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார்

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை விமர்சித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசிய கர்நாடக காங்கிரஸ் எம்.பி டி.கே.சுரேஷ், " இந்த பட்ஜெட்டில் புதிதாக எதுவும் இல்லை, இது தேர்தல் பட்ஜெட். இடைக்கால பட்ஜெட்டில் பெயர்கள் மட்டுமே மாற்றப்பட்டு உள்ளன. அவர்கள் சில சமஸ்கிருதப் பெயர்களை அறிமுகப்படுத்தி திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

டி.கே.சுரேஷ்
டி.கே.சுரேஷ்

நாங்கள் எங்களின் உரிமையான நிதியை மட்டுமே கோருகிறோம். தென் இந்தியா மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி மற்றும் நேரடி வரிகளில் சரியான பங்கை மத்திய அரசு சரியாக வழங்குவதில்லை. எனவே தென் இந்தியா மாநிலங்கள் அநீதியை சந்தித்து வருகின்றன. தென் இந்தியா மாநிலங்களில் இருந்து வசூலாகும் பணம் வட இந்தியா மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. இது தொடர்ந்தால், தனி நாடு கோரும் நிலைக்கு தள்ளப்படுவோம்.

தற்போது மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கு நிதி விநியோகம் செய்வது சரியான முறையல்ல. நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படும் நிதியை பார்த்தால், நமது மாநிலங்களின் நிதி வட மாநிலங்களுக்குத் திருப்பி விடப்படுவது தெளிவாகத் தெரிகிறது. 4 லட்சம் கோடிக்கு மேல் மத்திய அரசு எங்களிடமிருந்து பெறுகிறது, அதற்கு ஈடாக நாம் பெறுவது மிகக் குறைவு. தென் மாநிலங்களுக்கு மானியம் ஒதுக்குவதில் எப்போதும் அநீதி இருக்கிறது. இதை நாம் கேள்வி கேட்க வேண்டும். இதை சரி செய்யாவிட்டால், அனைத்து தென் மாநிலங்களும் தனி நாடு கோரி குரல் எழுப்ப வேண்டும்" என்று அவர் கூறினார்

டி.கே.சுரேஷ்
டி.கே.சுரேஷ்

காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பெங்களூரு பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா, தென்னிந்தியாவையும் வட இந்தியாவையும் பிரிக்க டி.கே. சுரேஷ் விரும்புகிறார் என்று கூறியுள்ளார். ஆனால், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், "நான் ஒன்றுபட்ட இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கிறேன். அவர் மக்களின் கருத்தை மட்டுமே தெரிவித்திருக்கிறார். மக்கள் புறக்கணிக்கப்படுவதால் தான் இப்படி நினைக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார். டி.கே.சுரேஷ் தெரிவித்துள்ள இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் தரத்துக்கு உயர்த்தப்படும்: பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவிப்பு!

வாரத்தில் 4 நாட்கள்தான் வேலை; 3 நாட்கள் விடுமுறை... ஜெர்மனியில் இன்று முதல் புதிய திட்டம்!

ஜனாதிபதி உரை பொய்கள் நிறைந்த பாஜகவின் தேர்தல் பரப்புரை: திருமாவளவன் கண்டனம்!

அதிமுக ஆட்சியில் ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்த விவகாரம்: 3 கட்டுமான நிறுவனங்களில் அதிரடி ரெய்டு!

ரோட்டர்டம் சர்வதேச படவிழா; ‘விடுதலை’ படத்திற்கு எழுந்து நின்று கை தட்டி வரவேற்பு... உற்சாகத்தில் படக்குழு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in