பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் கோவிட் நெறிமுறைகளை பின்பற்றினாரா? - காங்கிரஸ் கோபம்

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பாரத் ஜோடோ யாத்திரையில் கோவிட் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்தது சலசலப்பை உருவாக்கியுள்ளது. குஜராத் தேர்தலின் போது பிரதமர் மோடி கோவிட் நெறிமுறைகளை பின்பற்றினாரா என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

பாரத் ஜோடோ யாத்திரையின் போது கோவிட் வழிகாட்டுதல்களை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். இல்லையெனில் யாத்திரையை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். பாரத் ஜோடோ யாத்திரையில் முகக்கவசம் மற்றும் சானிடைசர்களின் பயன்பாட்டை செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே யாத்திரையில் பங்கேற்க வேண்டும் என்றும் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இது பாஜகவின் "இரட்டைத் தரம்" என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர்' “பாரத் ஜோடோ யாத்திரைக்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதால் கலக்கமடைந்து, அதை சீர்குலைப்பதே பாஜகவின் நோக்கம். இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் திரிபுராவில் பேரணி நடத்தியபோது கோவிட் நெறிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. மத்திய சுகாதார அமைச்சருக்கு அரசியல் நோக்கம் இல்லாமல் சரியான அக்கறை இருந்தால், முதலில் பிரதமருக்கு அவர் கடிதம் எழுத வேண்டும்” என்று ட்வீட் செய்துள்ளார்.

"கோவிட் நெறிமுறைகள் நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை. பாரத் ஜோடோ யாத்திரையில் ஏன் இந்த திடீர் கவனத்தை பாஜக ஏற்படுத்துகிறது?. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்றினாரா? " என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in