நடிகர் சிவாஜி கணேசனுக்கு முன்பு ஓபிஎஸ் பிறந்திருந்தால்?: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொன்ன ஆரூடம்

நடிகர் சிவாஜி கணேசனுக்கு முன்பு ஓபிஎஸ் பிறந்திருந்தால்?: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொன்ன ஆரூடம்

நடிகர் சிவாஜி கணேசனுக்கு முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் பிறந்திருந்தால் நடிப்பில் செவாலியராகவும், ஏன் ஆஸ்கார் அவார்டுக்குச் சொந்தகாரராக ஆகியிருப்பார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 35-வது நினைவு நாளையொட்டி டிச.24-ம் தேதி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு, கேட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை காவல் ஆணையரிடம் இன்று மனு அளித்தார்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பது குறித்து ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "கழக குடும்பமாக இருந்த திமுக தற்போது குடும்பமே கழகம் போல் மாறிவிட்டது, தற்போது திமுகவின் ஹெச்.ஆர் பதவியில் உதயநிதி ஸ்டாலின் உள்ளார். ஆளுநரே வேண்டாம் என திமுக கூறிவருகிறது. தற்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் விழாவுக்கு மட்டும் திமுகவிற்கு ஆளுநர் தேவையா?

அதிமுகவில் யாரையும் முன்னிலைப்படுத்துவதில்லை. ஆனால் திமுகவில் உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்துகின்றனர். வாரிசு அரசியல் நடத்தமாட்டோம் என பேசிய ஸ்டாலின், தற்போது வாரிசு அரசியல் தான் நடத்தி வருகிறார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்பது, திமுகவின் சகாப்தம் முடிகின்ற நிகழ்வாக பார்க்க முடிகிறது" என்று பதில் அளித்தார்.

அமைச்சர் பதவியேற்பு நிகழ்வுக்கு அதிமுக எதிர்கட்சி தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு," இது கட்சி தான் முடிவெடுக்கும். நிச்சயமாக எதிர்கட்சி தலைவர் கலந்து கொள்ளமாட்டார் என நான் நம்புகிறேன்" என்றார்.

குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் ஓபிஎஸ் பங்கேற்பு குறித்த கேள்விக்கு," ஓபிஎஸ் எப்போதுமே கல்யாண வீட்டில் மணமகனாகவும், சவவீட்டில் பிணமாகவும் நடந்துகொள்வார், சிவாஜிக்கு முன்னதாக ஓபிஎஸ் பிறந்திருந்தால் நடிப்பில் செவாலியராகவும், ஏன் ஆஸ்கார் அவார்டுக்குச் சொந்தகாரராக ஆகியிருப்பார்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in