3% இருக்கக்கூடிய பாஜக 33% ஆகுமா?... அண்ணாமலைக்கு ஏதோ கோளாறு - எஸ்.வி.சேகர் காட்டம்!

எஸ்.வி.சேகர்
எஸ்.வி.சேகர்

அண்ணாமலை பாஜகவிற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் அதிசயம் நடந்தால் பாரதிய ஜனதா கட்சி ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெறும். பார்க்க வருபவர்கள் எல்லாம் ஓட்டு போடுவார்கள் என்று நினைத்தால் எனக்கு ஏதோ கோளாறு என்று அர்த்தம் என எஸ்.வி.சேகர் காட்டமாக விமர்சித்துள்ளார்.

அரசியல்வாதியும், நடிகருமான எஸ்.வி.சேகர், நாகூர் தர்கா தலைவரின் மகள் திருமண விழாவில் பங்கேற்பதற்காக திருச்சி வந்தார். அப்போது அவர் ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.வி.சேகர், "நாடாளுமன்றத் தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவார். ராமர் அவருக்கு அந்த ஆசீர்வாதத்தை வழங்குவார். 3வது முறையாக மோடி பிரதமர் ஆவார். ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த அண்ணாமலையின் பங்கு அதில் பூஜ்ஜியமாக தான் இருக்கும்.

அண்ணாமலை யாத்திரை
அண்ணாமலை யாத்திரை

அண்ணாமலை குழந்தைதனமான அரசியல்வாதியாகச் செயல்பட்டு வருகிறார். அரை மணி நேரம் மட்டுமே நடக்கிறார். அண்ணாமலை நடைபயணம் செய்வதால் எந்த பயனும் இல்லை. எப்போதும் கூட்டம் வந்து ஓட்டாக மாறாது. அண்ணாமலை தனது பெருமையை பேசி வருகிறார். கட்சியை வளர்க்கும் திறமை பூஜ்ஜியம் தான். அதன் ரிசல்ட் மே மாதம் தெரியும்.

அதிமுகவுடன் கூட்டணி கூடாது என்பதை திட்டமிட்டு தான் அண்ணாமலை செயல்பட்டு வந்தார். அதன் பலனை இந்த தேர்தலில் பார்ப்பார். அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கக்கூடிய ஒரு கட்சி. ஆனால் தமிழகத்தில் பாஜக 3 சதவீதம் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு கட்சி. மூன்று சதவீதம் 33 சதவீதம் ஆகுமா என்பதனை வரும் தேர்தல் ரிசல்ட்டில் மட்டுமே நாம் பார்க்க முடியும்.

எஸ்.வி. சேகர்
எஸ்.வி. சேகர்

அண்ணாமலை பாஜகவிற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். அண்ணாமலை சொல்வது போல 40க்கு 40 தொகுதிகளில் எல்லாம் வெற்றி பெற முடியாது. தமிழகத்தில் அதிசயம் நடந்தால் பாரதிய ஜனதா கட்சி ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெறும். ஏனென்றால் கூட்டணி இல்லை. அண்ணாமலை மோடியின் திட்டங்களை பொதுமக்களிடம் சரிவர எடுத்துச் செல்லவில்லை. அண்ணாமலை போன பாதை தவறாகிவிட்டது. என்னை பார்க்க வருபவர்கள் எல்லாம் ஓட்டு போடுவார்கள் என்று நினைத்தால் எனக்கு ஏதோ கோளாறு என்று அர்த்தம்." என காட்டமாகப் விமர்சித்தார்

விஜயின் அரசியல் குறித்து பதிலளித்த அவர், “அரசியலுக்கு வரும் நடிகர் விஜய் முதன் முதலாக தேர்தலில் போட்டியிடும்போது தனித்து நின்று வாக்குவங்கியை நிரூபித்துவிட்டால், அதன் பின்னர் அவருக்கு மிகப்பெரிய அரசியல் எதிர்காலம் இருக்கும். முதல் தேர்தலிலேயே கூட்டணி அமைத்து போட்டியிட்டுவிட்டால் அதன் பிறகு, தனது உண்மையான வாக்கு வங்கியை கண்டுபிடிப்பது கடினமாகிவிடும். ஒரு எம்ஜிஆர் தான் இருக்க முடியும்" என்று கூறினார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in