மணீஷ் சிசோடியா இன்று பாஜகவில் இணைந்தால்...நாளையே விடுதலையாவார்: அர்விந்த் கேஜ்ரிவால் தாக்கு

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், அருகில் மணீஷ் சிசோடியா
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், அருகில் மணீஷ் சிசோடியாமணீஷ் சிசோடியா இன்று பாஜகவில் இணைந்தால்...நாளையே விடுதலையாவார்: அர்விந்த் கேஜ்ரிவால் தாக்கு

மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதன் மூலம், சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் தனது அரசாங்கத்தின் பணிகளை நாசப்படுத்த பாஜக முயற்சிப்பதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட பின்னர் முதன்முறையாக ஊடகங்களுடன் பேசிய கேஜ்ரிவால், “மதுபான ஊழல் ஒரு சாக்குப்போக்கு. மணீஷ் சிசோடியா பாஜகவில் இன்று இணைந்தால், நாளைக்குள் அவர் விடுதலையாகிவிடுவார். ஊழல் பிரச்சினை அல்ல. அமைச்சர்கள் செய்த நல்ல பணியை நிறுத்துவதே இதன் நோக்கம். பாஜக ஆம் ஆத்மியை நிறுத்த விரும்புகிறது. நாங்கள் பஞ்சாபை வென்றதிலிருந்து, அவர்களால் எங்களைத் தாங்க முடியவில்லை. அவர்கள் எங்களை தடுக்க விரும்புவது நடக்காது என்று டெல்லி மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். டெல்லியின் நல்ல பணி அதிக வேகத்துடன் தொடரும்" என்று கூறினார்.

ஆம் ஆத்மி அரசு கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் சிறப்பாக செயல்படுகிறது என்று சுட்டிக்காட்டிய கேஜ்ரிவால், கல்வி அமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா டெல்லியில் முழு கல்வி மாதிரியையும் மாற்றியமைத்தார் என்றார். சத்யேந்தர் ஜெயின் டெல்லிக்கு மொஹல்லா கிளினிக்குகளை வழங்கினார் என்று தெரிவித்தார். ஆனால் மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் பிற இடங்களில் உள்ள பாஜக அரசுகளால் ஒரு பள்ளி அல்லது மருத்துவமனையைக்கூட சரிசெய்ய முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in