‘கர்மா ராகுல் காந்தியை திரும்ப தாக்குகிறது’ - 2013 சம்பவத்தை நினைவுகூரும் ஹிமந்த பிஸ்வா சர்மா!

ஹிமந்த பிஸ்வா சர்மா
ஹிமந்த பிஸ்வா சர்மா ‘கர்மா ராகுல் காந்தியை திரும்ப தாக்குகிறது’ - 2013 சம்பவத்தை நினைவுகூரும் ஹிமந்த பிஸ்வா சர்மா!

எம்.பி, எம்எல்ஏக்களின் உடனடி தகுதி இழப்புக்கு எதிரான அவசரச் சட்டத்தை 2013ல் ராகுல் காந்தியே கிழித்து எறிந்தார். கர்மா அவரைத் திரும்ப தாக்கியிருந்தால், எங்கள் தவறு என்ன என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கேள்வியெழுப்பியுள்ளார்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்டது குறித்து பதிலளித்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “உடனடி தகுதி இழப்பிற்கு எதிரான அவசரச் சட்டத்தை ராகுல் காந்தியே கிழித்துவிட்டார். கர்மா அவரைத் தாக்கியிருந்தால், எங்கள் தவறு என்ன?. அரசியல் தலைவர்கள் சில நேரங்களில் ஒருவரின் உணர்வுகளைப் புண்படுத்தும் சில விஷயங்களைச் சொல்லலாம். இதுபோன்ற விஷயங்கள் எங்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டால் நாங்கள் உடனடியாக மன்னிப்பு கேட்கிறோம். மோடி பெயர் சர்ச்சை விவகாரத்தில் ஐந்து ஆண்டுகளாக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவில்லை. இப்போது நீதிமன்றம் தண்டனை அளித்தும் அவர் இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. ஏன் இவ்வளவு திமிர்?. நீதிமன்ற உத்தரவில் உங்களுக்கு திருப்தி இல்லை என்றால், நீங்கள் தண்டனை உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்” என்று கூறினார்


ஏப்ரல் 2013ல் உச்ச நீதிமன்றம், குறைந்தபட்சம் இரண்டாண்டு சிறைத்தண்டனை பெற்ற எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று உத்தரவிட்டது. இதன் பின்னர் ஒரு அரசாணையைப் பயன்படுத்தி அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசாங்கம் இந்த உத்தரவை ரத்து செய்ய முயன்றது. 2013 செப்டம்பர் மாதம் உடனடி தகுதிநீக்கத்துக்கு எதிரான ஒரு அவசரசட்டத்தை இயற்றி அதனை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு காங்கிரஸ் அரசு அனுப்பியது. ஆனால் அப்போது, ராகுல் காந்தி தங்கள் அரசாங்கத்தின் இந்த முடிவை மிகக்கடுமையாக எதிர்த்தார். இந்த அவசரசட்டம் முட்டாள்தனமானது என்றும், இது குப்பையில் வீசப்படவேண்டும் என்றும் கூறினார். இதனைத் தொடர்ந்து உடனடி தகுதியிழப்புக்கு எதிரான அந்த அவசர சட்டம் அப்படியே கைவிடப்பட்டது.



Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in