`எங்களிடம் வந்தால் தூய்மையாக மாற்றிவிடுவோம்' - வானதி சீனிவாசன் கலகல

`எங்களிடம் வந்தால் தூய்மையாக மாற்றிவிடுவோம்' - வானதி சீனிவாசன் கலகல

"எங்களிடம் வந்தால் அவர்களை தூய்மையாக மாற்றிவிடுவோம்" என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கூறினார்.

கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``பாஜக மகளிரணி சார்பில் நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுதானிய ஆண்டை கொண்டாடும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சிறுதானிய பாரம்பரிய உணவுத் திருவிழா நடத்தி கொண்டிருக்கிறது. கர்நாடக சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின் மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடகா அரசின் முயற்சிக்கு இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பிரதமர் மோடி எதிர்ப்பை மட்டும் கவனத்தில் கொண்டு, சுயநல அரசியலுக்காக விவசாயிகள் நலனை, மாநிலத்தை உரிமையை முதல்வர் காவு கொடுக்கிறார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு மேகேதாட்டு அணை கட்டுவதில் உறுதியாக உள்ளது. திமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் எந்த காலத்தில் நடந்தது? நீதிமன்ற உத்தரவினால் துறைகள் நடவடிக்கை எடுத்தால் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்பதா? இது தான் சட்டத்திற்கு கொடுக்கும் மரியாதையா? விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டுத்தானமாக பேசுகிறார். திராவிட மாடல் ஆட்சியில் காலையில் குடிப்பவர்கள் குடிகாரர்கள் என அழைக்கப்பட மாட்டார்கள். பாஜகவை வாஷிங் மெஷின் என்றார்கள். இப்போது பாஜகவை கங்கை நதி என்கிறார்கள். பாஜகவை வாஷிங் மெஷின் என்றால், வாஷிங் மெஷின் தான். எங்களிடம் வந்தால் அவர்களை தூய்மையாக மாற்றிவிடுவோம். கங்கை நதி என்றால், கங்கை நதிதான். எங்களிடம் வந்தால் எல்லாத்தையும் புனிதமாக மாற்றும் சக்தி எங்களிடம் உள்ளது. எங்களிடம் யார் வந்தாலும் நல்லவர்களாக மாறி விடுவார்கள்.

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.விடம் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென மக்கள் நீதி மய்யத்தினர் கேட்கின்றனர். சட்டமன்ற உறுப்பினராக என்னென்ன செய்ய வேண்டுமோ, அத்தனையும் செய்து கொண்டுள்ளேன். கமல்ஹாசன் நான்கைந்து முறை கூட கோவைக்கு வரவில்லை. கமல்ஹாசன் ஒரு பெண்ணிற்கு கார் வாங்கி தந்தார். அதை கோவைக்கு வந்து கொடுக்ககூட அவருக்கு நேரமில்லை. நான் ஆயிரம் பெண்களுக்கு தையல் இயந்திரம் வாங்கி தந்து தொழில் முனைவோராக மாற்றியுள்ளேன்" எனத் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in