
கடும் குற்ற வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட எம்.பி., எம்எல்ஏக்களுக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.
கடந்த 2016ல் பாஜக மூத்த தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா, உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், எம்எல்ஏ,எம்.பிக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விரைந்து விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடும் குற்றம் வழக்கில் தண்டிக்கப்பட்ட எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடைவிதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை அமர்வு நடத்தி வந்த நிலையில், பல்வேறு கருத்துக்களை நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 கட்சிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை முடிவுற்ற நிலையில், இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கனமழை... இன்று 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!
இன்று முதல் 3 நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!
உஷார்... இன்று முதல் இந்த வழித்தடங்களில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது!
தொடங்கியது லாரிகள் வேலை நிறுத்தம்... சரக்கு போக்குவரத்து கடும் பாதிப்பு!