`பாஜக போட்டியிட்டால் நாங்கள் விலகிக் கொள்வோம்'- ஓபிஎஸ் அணி அறிவிப்பு

ஜேசிடி பிரபாகர்
ஜேசிடி பிரபாகர்பாஜக போட்டியிட்டால் நாங்கள் விலகிக் கொள்வோம் - ஓபிஎஸ் அணி அறிவிப்பு

``ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் நாங்கள் விலகிக் கொள்வோம். பாஜக போட்டியிடவில்லை என்றால் அதிமுக சார்பில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர் செல்வம் வேட்பாளரை அறிவிப்பார்'' என ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினர். இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’பாஜக போட்டியிடுவதாக இருந்தால் நாங்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடமாட்டோம் என பலமுறை தெரிவித்துள்ளோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய கட்சியான காங்கிரஸ் களம் காண்கிறது. அந்த வகையில் அவர்களுக்கு போட்டியாக பாஜக போட்டியிட்டால் மட்டுமே சரியாக இருக்கும்.

தேர்தல் பணிகளை ஈபிஎஸ் அணி தொடங்கி இருக்கலாம். ஆனால் பல்வேறு தேர்தல்களில் மறைந்த ஜெயலலிதாவுடன் பணியாற்றிய ஓபிஎஸ்ஸுக்கு நன்றாக தெரியும். எதை எப்போது செய்ய வேண்டும் என்று சரியான நேரத்தில் செய்வார்.

எங்கள் அணி சார்பில் போட்டியிட தொகுதிக்குள் இருந்தும் வெளியே இருந்தும் விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறார்கள் உரிய நேரத்தில் ஓபிஎஸ் அறிவிப்பார்’’ என தெரிவித்தார்.

இதனிடையே பேசிய மனோஜ் பாண்டியன், ’’ உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு சின்னம் குறித்து அல்ல. ஈபிஎஸ் அணியினருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது. தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை ஓபிஎஸ் தான் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். ஈபிஎஸ் விலகிவிட்டார். அதனால் இரட்டை இலை எங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும்’’ என கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in