அதிரடி ஆக்‌ஷனுக்கு பெயர் போன ஐஏஎஸ் அதிகாரி அனீஷ் சேகர் திடீர் ராஜினாமா!

அதிரடி ஆக்‌ஷனுக்கு பெயர் போன ஐஏஎஸ் அதிகாரி அனீஷ் சேகர் திடீர் ராஜினாமா!
Updated on
2 min read

தமிழ்நாடு எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி அனீஷ் சேகர் தனது பதவியை  ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அனீஷ் சேகர் ஐஏஎஸ்
அனீஷ் சேகர் ஐஏஎஸ்

தமிழ்நாடு கேடர் 2011ம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அதிகாரியும், தற்போது எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் உள்ள அனீஷ் சேகர் தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  அனீஷ் சேகரை பொருத்தவரை ஏற்கெனவே மதுரையில் ஆட்சியராக இருந்தவர். மதுரையில் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது சிறந்த அதிகாரி என்று பெயர் பெற்றவர். 

அதேபோல பல்வேறு விதமான அதிரடி மற்றும் நிர்வாக சீர்திருத்த  நடவடிக்கைகளையும் அவர் மதுரை ஆட்சியராக இருந்தபோது மேற்கொண்டுள்ளார். ஒரு துடிப்பான இளைஞராக பணியாற்றி வந்த அவர் தன்னுடைய சொந்த காரணத்திற்காக ஐஏஎஸ் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். எல்காட்  மேலாண் இயக்குனராக உள்ள அனீஷ் சேகர் அந்த  பொறுப்பில் இருந்து விலகினார்.

அனீஷ் சேகர் ஐஏஎஸ்
அனீஷ் சேகர் ஐஏஎஸ்

தனக்கு தனிப்பட்ட காரணங்கள் சில இருப்பதாகவும், அந்த காரணத்தினால் ஐஏஎஸ் பதவியில் இருந்து விலகுவதாகவும் அவர்  அறிவித்துள்ளார். ஏற்கனவே பல மாவட்டங்களில் துணை ஆட்சியராகவும், மதுரை ஆட்சியராகவும், தமிழக அரசின் பல துறைகளில் நிர்வாக ரீதியாகவும் பணியாற்றியுள்ள அனீஷ் சேகர் தனது சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக தெரிவித்துள்ளது ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே டிஎன்பிஎஸ்சியில் இருந்து பணியாற்றியிருந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரி 2 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய சொந்த காரணத்திற்காக விலகுவதாக அறிவித்த நிலையில், தற்போது மற்றொரு அதிகாரியும் ஐஏஎஸ் பதவியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதையும் வாசிக்கலாமே...

பொதுத்தேர்வில் வெற்றிக்கான முக்கிய குறிப்புகள்!

70 கோடி வெச்சிருந்தா வரலாம்... வேட்பாளர்களுக்கு அதிமுக விதிக்கும் நிபந்தனை!

நள்ளிரவில் மோடி வீட்டில் நடந்த கூட்டம்... 550 வேட்பாளர்கள் பட்டியல் பரிசீலனை!

டாக்காவில் நள்ளிரவில் நடந்த கோரம்... அடுக்குமாடிக் கட்டிடத்தில் பயங்கர தீ: 43 பேர் உடல் கருகி பலி!

ஆபாச வீடியோ மிரட்டல் விவகாரத்தில் திமுகவுக்குத் தொடர்பா?: தருமபுரம் ஆதீனம் விளக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in