மிசாவில் கைதான போது போலீஸ் பாதுகாப்போடு வந்து தேர்வு எழுதினேன்: மாநிலக்கல்லூரி விழாவில் பழைய நினைவுகளைப் பகிர்ந்த ஸ்டாலின்!


மிசாவில் கைதான போது போலீஸ் பாதுகாப்போடு வந்து தேர்வு எழுதினேன்: மாநிலக்கல்லூரி விழாவில் பழைய நினைவுகளைப் பகிர்ந்த ஸ்டாலின்!

சென்னை மாநிலக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நான் படித்த கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டின் முதல்வராக மட்டும் நான் வாழ்த்தவில்லை. இந்த கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற முறையிலும் வாழ்த்துகிறேன் என்றார்.

மேலும், " கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்த போதே எனக்கு அரசியல் மீது ஆர்வம் வந்தது. இந்தியாவில் நெருக்கடி நிலை ஏற்பட்ட போது, திமுகவினர் 500-க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர். மிசா சட்டத்தில் கைதான போது போலீஸ் பாதுகாப்போடு மாநிலக் கல்லூரிக்கு வந்து தேர்வு எழுதினேன்.

கல்வியைக் கட்டாய கடமையாக வலியுறுத்தி ஒரு இயக்கமாக தொடங்கி இருக்கிறேன். யாராலும் திருட முடியாத உண்மையான சொத்து கல்வி தான். முதல் தலைமுறை பட்டதாரிகள், விளிம்பு நிலை, ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் அதிகம் படிக்கும் மாநிலக் கல்லூயில் 2,000 பேர் அமரும் வகையில் கலைஞர் பெயரில் மாபெரும் அரங்கம் அமைக்கப்படும். தயாநிதி மாறனும், உதயநிதி ஸ்டாலினும் மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி வழங்க வேண்டும். அத்துடன் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மாநில கல்லூரி வளாகத்திலேயே தாங்கும் விடுதி அமைக்கப்படும்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in