‘முதல்வர் ஸ்டாலின் பூரண நலம்பெற வேண்டுகிறேன்’ - ஓபிஎஸ் ட்வீட்!

‘முதல்வர் ஸ்டாலின் பூரண நலம்பெற வேண்டுகிறேன்’ - ஓபிஎஸ் ட்வீட்!

கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் பூரண நலம்பெற வேண்டுகிறேன் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்

மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து விரைந்து பூரண நலம் பெற்று மக்கள் பணியைத் தொடர, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது, அவர் தற்போது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இதன்காரணமாக அடுத்த சில நாட்களுக்கு அவர் பங்கேற்பதாக இருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in