நடிகை கெளதமிக்கு துணையாக நிற்பேன்! அண்ணாமலை

அண்ணாமலை- நடிகை கெளதமி
அண்ணாமலை- நடிகை கெளதமி

"நடிகை கெளதமிக்கு நியாயம் கிடைக்க பாஜக துணை நிற்கும். தனிப்பட்ட முறையிலும் அவருக்கு துணை நிற்பேன்" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

தமிழ் சினிமாவில் 80,90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கெளதமி. இவர் பாஜகவில் இணைந்து அக்கட்சி நிர்வாகியாக செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 23ம் தேதி பாஜகவில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும், அக்கட்சியில் இணைந்து 25 ஆண்டுகள் ஆனபோதிலும் அக்கட்சித் தலைவர்களிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்காததால் அக்கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார் கெளதமி. இது பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகை கெளதமி
நடிகை கெளதமி

இதுகுறித்து செய்தியாளர்ளிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "நடிகை கெளதமி புகார் அளித்துள்ள நபருக்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அப்படி இருக்கும் நிலையில், கட்சியால் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? கெளதமி கட்சியில் தொடர்வது அவரது தனிப்பட்ட உரிமை. கட்சியில் இருந்து விலகினால் அவருக்கு தேவையான உதவியை கட்சி செய்யும். கெளதமிக்கு நியாயம் கிடைக்க பாஜக துணை நிற்கும். தனிப்பட்ட முறையிலும் அவருக்கு துணை நிற்பேன்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in