`எனது சகோதரருக்காக என் உயிரையே தியாகம் செய்வேன்'

யோகி ஆதித்யநாத்துக்கு பிரியங்கா காந்தி பதிலடி
பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

``எனது சகோதரர் ராகுலுக்காக என் உயிரையே தியாகம் செய்வேன்" என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி.

உத்தராகண்ட், உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் விறுவிறுப்படைந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் 2ம் கட்டமாகவும், கோவை, உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. 5 மாநிலங்களிலும் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இதில், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியும், உத்தராகண்ட், உத்தரபிரதேசம், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியும் நடந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், "பிரியங்கா காந்திக்கும் அவரது சகோதரரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்திக்கும் இடையே பிளவு ஏற்படக்கூடும். காங்கிரஸ் கட்சி மூழ்கிக் கொண்டிருக்கிறது. அதனை அழிக்க ராகுல் காந்தியும், பிரியங்காவும் போதும். காங்கிரஸ் கட்சியை அழிக்க வேறு யாரும் தேவையில்லை. அண்ணன், தங்கை இருவருமே போதும், உத்தராகண்டில் காங்கிரசை ஆதரித்து ஏன் நேரத்தை வீணடிக்க நினைக்கிறீர்கள்என" என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் யோகி ஆதித்யநாத்துக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, "என் சகோதரருக்காக எனது உயிரையே தியாகம் செய்ய முடியும். அதேபோல் ராகுலாலும் எனக்கு அதையே செய்ய முடியும். பாஜகவில் மோதல் உள்ளது. காங்கிரஸில் இல்லை. ஆதித்யநாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையே பிளவு உள்ளது" என்று காட்டமாக கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in